ஜியோவின் சேவை யார் யாருக்கு கிடைக்கும் தெரியுமா? - Asiriyar.Net

Tuesday, August 20, 2019

ஜியோவின் சேவை யார் யாருக்கு கிடைக்கும் தெரியுமா?
ரிலையன்ஸ் ஜியோ பிராட்பேண்ட் சேவையானது யார் யாருக்கு வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரிலையன்ஸின் ஃபைபர் பிராட்பேண்ட் சேவையானது, வருகிற 2019 செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் செயல்பட துவங்கும் என ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த சேவையானது யார் யாருக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம், வழக்கம் போல ஜியோ ஃபைர் சேவையிலும் ஒரு வெல்கம் ஆஃபர் உள்ளது. இதன் கீழ் வாடிக்கையாளர்களுக்கு எச்டி டிவி அல்லது 4 கே எல்இடி டிவி ஒன்று இலவசமாக கிடைக்கும்.


உடன் வாடிக்கையாளர்கள் 4கே செட்-டாப் பாக்ஸையும் இலவசமாகப் பெறுவார்கள்.

ஆனால் இந்த இலவச எல்.ஈ.டி டிவி ஆனது நிறுவனத்தின் வருடாந்திர திட்டங்களைத் தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அல்லது நிறுவனத்தால் ஜியோ ஃபாரெவர் என்று கூறப்படும் திட்டங்களை பெறும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

மேலும், பயனர்கள் இணையதளத்தில் ஜியோ ஃபைபர் பிராட்பேண்டிற்காக முன்பதிவை நிகழ்த்த வேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாது. முன் பதிவு செய்தால் மட்டுமே கிடைக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Post Top Ad