இஸ்ரோ நடத்தும் வினாடி வினா நிகழ்ச்சியில் பங்கு பெறுங்கள் மாணவர்களே! இது ஆன் லைன் வினாடி வினா! வாய்ப்பைத் தவற விடாதீர்கள்! - Asiriyar.Net

Tuesday, August 27, 2019

இஸ்ரோ நடத்தும் வினாடி வினா நிகழ்ச்சியில் பங்கு பெறுங்கள் மாணவர்களே! இது ஆன் லைன் வினாடி வினா! வாய்ப்பைத் தவற விடாதீர்கள்!
இஸ்ரோ நடத்தும் வினாடி வினா நிகழ்ச்சியில் 

பங்கு பெறுங்கள் மாணவர்களே!

இது ஆன் லைன் வினாடி வினா!

வாய்ப்பைத் தவற விடாதீர்கள்!

-----------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-----------------------------------------------------------

1) சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப் பட்டதைத் தொடர்ந்து 

இஸ்ரோ நிறுவனம் ஒரு ஆன் லைன் வினாடி வினா 

நிகழ்ச்சியை நடத்துகிறது.2) பின்வரும் இணைய தளத்துக்குச் சென்று quiz என்ற 

பகுதியைப் பார்க்கவும். ( https://quiz.mygov.in)Log in செய்து பதிவு செய்து 

கொண்டு வினாடி வினாவில் பங்கேற்கலாம்.

கட்டணம் எதுவும் செலுத்தத் தேவை இல்லை.3) இந்தியக் குடிமக்கள் (Indian citizens) மட்டுமே பங்கேற்கலாம்.4) அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறும் மாணவர்கள் 

(அல்லது மாணவியர்) இஸ்ரோ நிலையத்துக்கு அழைத்துச் 


செல்லப் படுவர். அங்கு இந்தியப் பிரதமர் மோடி 

அவர்களுடன் அமர்ந்து நிலவில் சந்திரயான் 

தரையிறங்குவதைப் பார்க்கலாம். இதற்கு ஆகும் 

அனைத்துச் செலவுகளையும் இஸ்ரோ மேற்கொள்ளும்.5) ஒரு கேள்விக்கு விடையளிக்க அரை நிமிடம் என்ற 

அளவில், அதிக பட்சம் 20 கேள்விகளுக்கு 600 வினாடிகளில் 

(10 நிமிடங்கள்) விடையளிக்க வேண்டும்.6) பங்கேற்ற அனைவருக்கும் participation certificate வழங்கப்படும்.7) வெற்றி பெற்றால் மகிழ்ச்சி! வெற்றி பெறாவிட்டாலும் 

இது போன்ற வினாடி வினா நிகழ்ச்சியில் பங்கு 

பெறுவதே பெருமை! இது தன்னம்பிக்கையை வளர்க்கும்.
8) பங்கு பெறுங்கள் மாணவர்களே! பெற்றோர்களே 

உங்கள் பிள்ளைகளை இத்தேர்வில் பங்கேற்க வையுங்கள்!


Post Top Ad