பூமியை நெருங்கும் ராட்சத விண்கல்... அச்சத்தில் பொதுமக்கள் - Asiriyar.Net

Tuesday, August 20, 2019

பூமியை நெருங்கும் ராட்சத விண்கல்... அச்சத்தில் பொதுமக்கள்




விண்வெளியில் மிதந்துகொண்டிருக்கும் கோடிக்கணக்கான விண்கற்களில் ஒருசில விண்கற்கள் அவ்வப்போது பூமியின் புவிவட்டப் பாதைக்கு அருகில் வந்து கடந்து செல்லும். அப்போது சில நேரங்களில் அவற்றின் சிறிய துகள்கள் புவியின் வளிமண்டலத்துக்குள் நுழையும். அப்படி பூமியின் அருகில் வரும் விண்கற்களை, விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் மிக கூர்மையாக கண்காணித்து அது குறித்த தகவல்களையும் வெளியிடும்.
அந்த வகையில் 1998 OR2 என பெயரிடப்பட்டுள்ள பெரிய விண்கல் ஒன்று அடுத்த ஆண்டு பூமியை தாக்கலாம் என நாசா தெரிவித்துள்ளது. தற்போதைய நிலைப்படி பூமியின் அருகில் வந்து கடந்து செல்லும் வகையில் தான் அதன் நகர்வு உள்ளதாகவும், புறக்காரணங்களால் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டால் மட்டுமே பூமியை தாக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.



பூமியில் இருந்து 30.9 லட்சம் மைல் தூரத்தில் உள்ள இந்த விண்கல் 13,500 அடி சுற்றளவு கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் தேதி மாலை 3.26 மணிக்கு பூமியை தாக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அதிக தொலைவில் இந்த விண்கல் இருந்தாலும், நாசா வெளியிட்டுள்ள இந்த செய்தி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Post Top Ad