நீரழிவு நோய்க்கு உகந்த பாகற்காய் சூப் செய்வது எப்படி? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, November 4, 2018

நீரழிவு நோய்க்கு உகந்த பாகற்காய் சூப் செய்வது எப்படி?


சர்க்கரை நோயாளிகள் வாரம் ஒருமுறை பாகற்காய் சூப் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று இந்த பாகற்காய் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.





தேவையான பொருட்கள் :


பெரிய பாகற்காய் - 1


எலுமிச்சம்பழம் - பாதி

காய்ச்சிய பால் - 1/2 கப்

மஞ்சள் தூள் - சிறிதளவு

எண்ணெய் - 1 தேக்கரண்டி

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 1

மிளகு தூள் - 1 ஸ்பூன்



தாளிக்க :


சோம்பு - 1/4 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி

பட்டை - 1

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது


உப்பு - தேவையான அளவு






செய்முறை :


பாகற்காயை பொடியாக நறுக்கி தண்ணீரில் அலசி சிறிது மஞ்சள் தூள் சேர்த்து 2 விசில் போட்டு வேக வைத்து கொள்ளவும்.


வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சோம்பு, உளுத்தம் பருப்பு, பட்டை, கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும். அத்துடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். 


தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கியதும் இத்துடன் வெந்த பாகற்காய் போட்டு கிளறி தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து ஒரு விசில் விட்டு இறக்க வேண்டும்.


விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து அதனுடன் உப்பு, மிளகு தூள் சேர்த்து, எலுமிச்சம்பழம் பிழிய வேண்டும்.


கடைசியாக பால் சேர்த்து கொத்துமல்லி தூவி பரிமாற வேண்டும்..


சத்தான பாகற்காய் சூப் ரெடி.

Post Top Ad