இனிமேல் வாட்சப்பில் வதந்தி பரப்பாதீர்கள்! உங்களின் அடையாளம் மற்றும் இருப்பிடம் மத்திய அரசு கையில்!! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, November 1, 2018

இனிமேல் வாட்சப்பில் வதந்தி பரப்பாதீர்கள்! உங்களின் அடையாளம் மற்றும் இருப்பிடம் மத்திய அரசு கையில்!!


வாட்சப்பில் வதந்தி மற்றும் தவறான செய்திகளை பரப்புவோர் பற்றிய விவரங்களைi அறிந்து கொள்ளும் வசதி வேண்டும் என வாட்ஸ் அப் நிறுவனத்திடம் மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது.





இன்றைய சூழலில் குறுஞ்செய்திகளை அனுப்புவதில் முதலிடத்தில் இருப்பது வாட்ஸ்அப் தான். அதிலும் இந்தியாவில் ஸ்மார்ட்போன் வைத்துள்ள அனைவரும் கண்டிப்பாக வாட்ஸ் அப்பை பயன்படுகிறார்கள். உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான மக்களால் வாட்ஸ் அப் பயன்படுத்தப்படுகிறது.


இந்த நிலையில், சமீபகாலமாகவே வாட்ஸ் அப் வழியாக பரப்பபடும் தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாட்ஸ் அப் வதந்திகளால், சில அப்பாவிகள் பலியாகினர். 

இதையடுத்து, மத்திய அரசு வாட்ஸ் அப் நிறுவனத்திடம் பல்வேறு கோரிக்கை வைத்தது. அதன் அடிப்படையில், தவறான தகவல் அதிகப்படியாக பரவாமல் இருக்க, ஒருவர் ஒரே நேரத்தில் வாட்சப்பில் ஒரு செய்தியை 5 பேருக்கு மட்டுமே பகிர முடியும் என்று வாட்சப் நிறுவனம் அறிவித்தது.




மேலும், வாட்ஸ் - ஆப் நிறுவனத்தின் துணை தலைவர் கிறிஸ் டேனியல்ஸ், மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை நேரில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு முடிந்த உடன், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:
வாட்சப்பில் வதந்தி மற்றும் தவறான செய்திகளை பரப்புவோர் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளும் வசதி வேண்டும் என வாட்ஸ் - ஆப் நிறுவனத்தின் துணை தலைவரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இது தொடர்பாக அவர் தொழில்நுட்ப குழுவுடன் ஆலோசித்து, பின், பதில் அளிப்பதாக தெரிவித்துள்ளார். 

மேலும், தவறான தகவல்களை பரப்புவோரின் அடையாளம் மற்றும் இருப்பிடம் குறித்த அணைத்து தகவலையும் மத்திய அரசுக்கு தெரிவிக்கும்படியும் கோரிக்கை வைத்துள்ளேன். இவ்வாறு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

Post Top Ad