பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறன் எப்படி: ஆய்வு நடத்த உத்தரவு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, November 5, 2018

பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறன் எப்படி: ஆய்வு நடத்த உத்தரவு





எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, வாசிப்பு பயிற்சி அளிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைந்ததால், பள்ளிகளில் ஆய்வு நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது

.மத்திய அரசின், தேசிய கற்றல் அடைவுத்தேர்வு(நாஸ்) முடிவுகள், வாசிப்பு பயிற்சியில் தமிழக மாணவர்கள் பின்தங்கியிருப்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இதனால், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும், மாணவர்களை தரம் பிரித்து, வாசிப்பு பயிற்சி அளிக்குமாறு, செப். துவக்கத்தில் இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டார்.பள்ளி நேரத்தில், கற்றலில் பின்தங்கியோருக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கவும், அக்., இறுதிக்குள், பயிற்சி அளிக்கவும், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.இயக்குனர் அளித்த காலஅவகாசம், முடிவடைந்த நிலையில், மாவட்ட வாரியாக, மாணவர்களின் வாசிப்பு திறன் குறித்து, ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. தீபாவளி விடுமுறைக்குப் பின், ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.முன்னறிவிப்பின்றி ஆய்வுஆசிரியர் பயிற்றுனர்கள் கூறுகையில்,'பள்ளிகளில் தினசரி வாசிப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்கள் எந்தளவுக்கு அதை உள்வாங்கி கொண்டனர் என்பது, ஆய்வின் போது தான் தெரியவரும். முன்னறிவிப்பின்றி பள்ளிகளில் ஆய்வு நடத்தப்படும்' என்றனர்.

Post Top Ad