தற்போது உள்ள சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க இயலாது - அமைச்சர் செங்கோட்டையன் - Asiriyar.Net

Saturday, June 6, 2020

தற்போது உள்ள சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க இயலாது - அமைச்சர் செங்கோட்டையன்



தமிழகத்தில்‌ தற்போது இருக்கும்‌ சூழ்நிலையில்‌ பள்ளிகளை திறந்து வகுப்‌ புகளை நடத்த இயலாது. ஆன்லைன்‌ மூலமாகத்‌ தான்‌ கல்வியை கற்றுத்தர முடியும்‌ என்று அமைச்சர்‌ செங்கோட்டையன்‌ கூறி னார்‌. 

இது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர்‌ செங்கோட்டையன்‌ இன்று ஈரோட்டில் நிருபர்களிடம்‌ கூறியதாவது: 

இன்றைக்கு இருக்கும்‌ சூழ்நிலையில்‌ பள்ளிகளை திறந்து வகுப்புகளை நடத்த இயலாது. அதே நேரத்தில்‌ அன்லைன்‌ மூலமாகத்‌ தான்‌ மாணவர்களுக்கு கல்வியை கற்றுத்தர முடியும்‌. இந்த சூழ்நியைல்‌ இதைத்தவிர வேறு வழி யில்லை. 

தனியார்‌ பள்‌ளிகளை பொறுத்தவரை ஆன்லைன்‌ மூலமாக மாணவர்களுக்கு பாடம்‌ எடுக்க வேண்டும்‌ என்றால்‌, கட்டணத்தை செலுத்த வேண்டும்‌ என்றும்‌, கட்‌டாத மாணவர்களுக்கு வகுப்புகள்‌ நடத்தப்பட மாட்டாது என்று எங்கா வது சம்பவம்‌ இருக்குமா னால்‌, அரசின்‌ கவனத்‌துக்கு வந்தால்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌. இதுபற்றி முதன்மை கல்வி அலுவலர்கள்‌, மாவட்ட கல்வி அலுவலர்கள்‌ எல்லா பள்‌ ளிகளுக்கும்‌ கடிதம்‌ எழுதி யுள்ளனர்‌. 

அதுபோன்று ஏதாவது தவறுகள்‌ இருக்குமானால்‌ அரசு உறிய நடவடிக்கை எடுக்கும்‌. அரசை பொறுத்தவரை யிலும்‌, எந்தெந்த இடங்க ளில்‌ கொரோனா வைரஸ்‌ கூடுதலாக இருக்கிறது என்று மக்கள்‌ நல்வாழ்வு துறை மூலமாக கண்காணித்து, அங்கு இருக்கன்ற 10ம்‌ வகுப்பு மாணவர்களை வேன்‌ மூலமாக அழைத்து வந்து தனி அறையில்‌, அவர்கள்‌ தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்ப டும்‌. 

தேர்வு முடிந்ததும்‌, மீண்டும்வேன்‌ மூலம்‌ அந்த மாணவர்களை வீட்டுக்கு அழைத்து செல்லும்‌ பணிகளை அரசு செய்யும்‌. வரு கிற 8ீ மற்றும்‌ 9ம்‌ தேதிஹால்‌ டிக்கெட்‌ வழங்கும்போது தேர்வு எழுதும்‌ மாணவ - மாணவிகளுக்கு இரண்டு மாஸ்க்‌ வழங்கப்படும்‌. 

மாணவர்கள்‌ வருவதற்கு முன்னால்‌, தேர்வு எழு தும்‌ மையங்களில்‌ கிருமி நாசினி தெளிப்பதற்கும்‌ அரசு நடவடிக்கை எடுத்‌ திருக்கிறது. பாடத்திட்டங்‌ களில்‌ மாற்றம்‌ கொண்டு வருவது குறித்து கல்வி அதி காரிகள்‌, கல்வியாளர்கள்‌ கொண்ட 18பேர் குழுக்கள்‌ ஆய்வு செய்து வருகிறது. அன்லைன்‌ மூலமாக, எப்‌ படி மாணவர்களுக்கு 2 மாத இடைவெளியை சரி செய்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்‌ பட்டு வருகிறது. இறுதி யாகமுடிவு ஏற்பட்ட பிறகு முதல்வரின்‌ கவனத்துக்கு எடுத்துச்‌ சென்று, முடிவு கள்‌ எடுக்கப்படும்‌. இவ்‌ வாறு அவர்‌ கூறினார்‌.



Post Top Ad