தேசிய கீதத்தை தமிழில் பாடும் ஆசிரியை, மாணவிகள் - வீடியோ - Asiriyar.Net

Monday, October 7, 2019

தேசிய கீதத்தை தமிழில் பாடும் ஆசிரியை, மாணவிகள் - வீடியோ




அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் தேசிய கீதத்தை தமிழில் பாடுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவின் தேசிய கீதமாக ரவீந்திரநாத் தாகூர் எழுதிய 'ஜன கண மன அதிநாயக..' என்ற பாடல் உள்ளது. 52 நொடிகள் இசையுடன் பாடும் வகையில் இந்த பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், அரசு நிகழ்வுகள் என குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே தேசிய கீதத்தை பாட முடியும்.

இந்நிலையில், அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் தேசிய கீதத்தை தமிழில் பாடுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வகுப்பறை ஒன்றில் மாணவிகளின் நடுவே நிற்கும் ஆசிரியை முதலில் தேசிய கீதத்தை தமிழில் பாடுகிறார். அவரை தொடர்ந்து மாணவிகளும் பாடுகின்றனர்.

அதில், 'இனங்களும், மொழிகளும் பல இருந்தும் மனங்களில் பாரத தாயே !.. வடக்கே விரிந்த தேசாபிமான தெற்கில் குமரியில் ஒலிக்கும்.. இன மத வேற்றுமை உடைகளில் இருந்தும் இதயத்தில் ஒற்றுமை பொங்கும்..' என பாடல் வரிகள் இருக்கின்றன. இதனை பலரும் பாராட்டி கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். இருப்பினும், இந்த மொழிப்பெயர்ப்பு தவறானது என்றும், இதுபோன்று பாடுவது சட்டவிரோதமானது என்றும் சிலர் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

http://https://twitter.com/i/status/1181132484924198913

Post Top Ad