வட்டார கல்வி அலுவலர் ஊதிய உயர்வு; அறிக்கையளிக்க உத்தரவு - Asiriyar.Net

Thursday, October 17, 2019

வட்டார கல்வி அலுவலர் ஊதிய உயர்வு; அறிக்கையளிக்க உத்தரவு




கடந்த கல்வியாண்டில், கல்வித்துறை நிர்வாகத்தில் பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்கள் கலைக்கப்பட்டன. உதவி தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்கள், வட்டார கல்வி அலுவலர் பணியிடமாக மாற்றப்பட்டன. இதில், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணிக்கு சமமான பணியிடமாக, உதவி தொடக்க கல்வி அலுவலர் பணியிடம் கருதப்பட்டது. தற்போது, நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, பதவி உயர்வு பெறும் வகையில், வட்டார கல்வி அலுவலர் பணியிடம் மாற்றப்பட்டுள்ளது. அதற்கேற்ப, ஊதிய விகிதம் மாற்றப்பட்டுள்ளது. இதை அமல்படுத்த, தற்போது பணிபுரியும் வட்டார கல்வி அலுவலர்கள், தங்கள் பணிக்காலம், பதவி உயர்வு, சம்பள விகிதம் உள்ளிட்ட விபரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்க, தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

Post Top Ad