தமிழகத்தில் அடுத்த மூன்று தினங்களுக்கு கன மழை! - Asiriyar.Net

Thursday, October 17, 2019

தமிழகத்தில் அடுத்த மூன்று தினங்களுக்கு கன மழை!






தமிழகத்தில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில், பெய்து வந்த பருவமழை தற்சமயம் படிப்படியாக குறைந்து வருவதால் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தற்போது தொடங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று தமிழகம் முழுவதும் லேசான மழை பெய்து வந்த நிலையில், வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்றும் கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்த ஆய்வு மையம், இந்த மழை அடுத்த மூன்று, நான்கு தினங்களுக்கு தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.



சென்னையில் நேற்று காலையில் ஆங்காங்கே மழை பெய்ததைப் போல இன்றும் சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் இருந்து வந்தாலும், நகரின் சில பகுதிகளில் மிதமானது முதல் கன மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Post Top Ad