சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி, அதிரடியாக மாற்றம்!! - Asiriyar.Net

Saturday, August 10, 2019

சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி, அதிரடியாக மாற்றம்!!


சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி, அதிரடியாக மாற்றி பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் மேலும் சிலருக்கு பதவி உயர்வு வழங்கியும் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் நேற்று வெளியிட்ட அரசாணை: பள்ளிக்கல்வித்துறையின் கல்விப் பணியின் கீழ் வரும் முதன்மைக் கல்வி அலுவலர்கள், அதற்கு நிகரான பதவிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு பணியிடமாறுதல், மாவட்ட கல்வி அலுவலர் பணியிடத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இதன்படி, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, திருவள்ளூர் மாவட்டத்துக்கும், திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் சென்னை மாவட்டத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.


Post Top Ad