உலகிலேயே சிறப்பாக கல்வி கற்பிக்கும் முதல் 10 நாடுகள் இவைதான்! - இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது தெரியுமா? - Asiriyar.Net

Tuesday, August 20, 2019

உலகிலேயே சிறப்பாக கல்வி கற்பிக்கும் முதல் 10 நாடுகள் இவைதான்! - இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது தெரியுமா?உலக கல்வியறிவு விகிதத்தில் பின் தங்கிய இந்திய கல்வித் தரம்.
கல்வி என்பது ஒரு மனிதனுக்கு நாகரிகம் பற்றிய அடிப்படை புரிதலையும். ஒரு குடிமகனாக அவர்களின் பங்கையும் அறிந்து கொள்ள உதவுகிறது. 

மேலும் கல்வி என்பது ஒரு தனிநபருக்கும் சமூகத்திற்கும் இடையே பிணைக்கப்பட்ட தொப்புள் கொடியாகும் .
நாம் எந்த தேசத்தில் அல்லது நாட்டில் வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல, நமது கல்வி முறையை எப்படி நாம் பாதுகாக்கின்றோம் எனும் அடிப்படை புரிதலே நமது அறிவைப் பாதுகாக்க உதவுகிறது.

ஆனால் புவியியல் பகுதிகள் வேறுபடுவதால், வெவ்வேறு நாடுகளில் கல்வி முறை வேறுபடுகிறது.

இந்த கட்டுரையில், தற்போதைய உலகின் தலைசிறந்த 10 வெவ்வேறு கல்வி முறைகள் மற்றும் அவற்றின் தரவரிசை பற்றிய ஒரு சுருக்கமான எழுதப்படுகிறது.

அதன்படி பொதுமக்களுக்கான வளர்ந்த கல்வி முறை, அடிப்படை மற்றும் உயர் கல்வியின் தரம் மற்றும் பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்களின் வீதம் போன்ற சில காரணிகளைக் கருத்தில் கொண்டு பட்டியல் தயாரிக்கப்பட்டு பின்வரும் நாடுகள் கல்வியறிவில் சிறந்த உலகின் 10 நாடுகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1.உலகிலேயே கல்வியில் சிறந்த நாடாக முதலிடத்தை ஃபின்லாந்து பெற்றுள்ளது.ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதம். 
தரக்குறியீடு விளம்பரங்கள் இல்லாத தனியார் பள்ளிகள் இல்லாத. மாணவர்களிடையே மன அழுத்தம் இல்லாமல், அறிவுசார் மற்றும் கல்வி சீர்திருத்தங்கள், அந்நாட்டின் கல்வி முறையில் முற்றிலும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன.

தென் கொரியா மற்றும் ஜப்பானுக்கு வலுவான போட்டியைக் கொடுத்து. தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது ஃபின்லாந்து
2.இரண்டாவது இடத்தில் ஜப்பான் உள்ளது. தென் கொரியா மற்றும் பிற நாடுகளின் கல்வித் தரத்தில் கடுமையான போட்டி இருந்தபோதிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக இரண்டாவது இடத்தை தக்க வைத்துள்ளது.

ஜப்பானிய குழந்தைகள் எல்லா நேரத்திலும் படிக்கிறார்கள்.
முதலில் ஒரு மதிப்புமிக்க பள்ளியில் சேர படிப்பு. பின்னர் ஒரு மதிப்புமிக்க பல்கலைக்கழகத்தில் சேர படிப்பு. பிறகு ஒரு மதிப்புமிக்க வேலை பெற படிப்பு என ஜப்பானிய இளைஞர்களுக்கு சிறந்த கல்வி முறையை வழங்குகிறது அந்நாடு, வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கொடுக்கிறது அந்நாட்டின் கல்வியறிவு.

3 வயதில் ஜப்பானில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் மழலையர் பள்ளிக்குச் செல்வது கட்டாயமாகும், அங்கு அவர்களுக்கு அடிப்படை கணிதம், வாசிப்பு மற்றும் எழுதுதல் ஆகியவை போதிக்கப்படுகிறது . தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் கல்வி இலவசமாகவும். உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


3. தென் கொரியா தொடர்ந்து மூன்றாவது முறையாக, உலகின் சிறந்த 20 கல்வியறிவு பெற்ற நாடுகளில். மூன்றாவது இடத்தை தக்க வைத்துள்ளது. 
5 முதல் 14 வயது வரையிலான மாணவர்களில் மகத்தான வளர்ச்சியைக் கொண்டுவரும் துறையில் தென் கொரியா மட்டுமே சிறப்பாக செயல்பட்டுள்ளது.

சராசரி உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பொதுவாக காலை 8 மணி முதல் இரவு 9:30 மணி அல்லது 10 மணி வரை படிப்பார்கள். சராசரி கொரிய உயர்நிலைப் பள்ளி மாணவருக்கு, நல்ல கல்லூரியில் சேருவதே குறிக்கோள், பெரும்பாலும், போட்டி அதிகமாக இருக்கும். அதனால் கொரிய உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு 16 மணிநேரம் பள்ளி வகுப்புகள் நடைபெறுகிறது. 

கல்வியில் முக்கியம் சார்ந்ததாக விளையாட்டு இருப்பதால், சராசரி டீன் ஏஜ் மாணவர்கள் நள்ளிரவு வரை வீட்டிற்கு வரமாட்டார்கள் . இதனால், இரவு உணவு பள்ளியில் வழங்கப்படுகிறது.
கொரியா கல்வி மற்றும் பள்ளிப்படிப்பை நூறு சதவிகித அளவுக்கு முன்னேற ஆர்வம் காட்டுகிறது. இதன் விளைவாக, கொரியா தனது கொரிய ஆசிரியர்களை பள்ளிக்கல்வி முறையின் தூண்களாகக் கருதுகிறது.


4. உயர் வர்கத்தினரிடையே வளர்ந்த கல்வி முறைக்கு பெயர் பெற்ற டென்மார்க். இந்த வரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது. 
முன்னதாக டென்மார்க் 8 வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
டென்மார்க்கில் கல்வி 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூலம் முறையே கல்வி பயிற்றுவிக்கப் படுகிறது. டேனிஷ் கல்வி முறையானது ஆரம்ப பள்ளி. கீழ்நிலைக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வி.
தொழிற்கல்வி மற்றும் பயிற்சி மேற்படிப்பு என. அனைத்து மட்டங்களிலும் உயர்தர கல்வி மற்றும் பயிற்சியை வழங்குகிறது.

5.உலகின் சிறந்த கல்வி முறையில் முதல் 5 நாடுகளில் ரஷ்யா 5 வது இடத்தைப் பெற்றுள்ளது, 
ரஷ்யாவில் அரசு பெரும்பாலான கல்வி சேவைகளை வழங்குகிறது,கல்வி வழக்கமாக ஆறு வயதிற்கு முன்பே ஆரம்ப பள்ளியுடன் தொடங்குகிறது, இருப்பினும் அது கட்டாயமில்லை. கல்வி மற்றும் அறிவியல் அமைச்சகத்தின் மூலம் கல்வியை ஒழுங்குபடுத்துகிறது. கல்விக்காக ரஷ்யா தனது ஜுடிபியில் 2005 ல் 2.7 சதவீதமும் 2013 ல் 3.8 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரஷ்ய பொது கல்வி என்பது தனிநபரின் அறிவுசார், உணர்ச்சி, தார்மீக மற்றும் உடல் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஒரு மாணவர் சமுதாயத்தில் வாழ்க்கையைத் தழுவிக்கொள்ளும் திறன்களை வளர்ப்பதோடு, தொழில்முறை கல்வி தொடர்பான தேர்வுகளை எதிர்கொள்ள தனிநபர்களுக்கு உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

6. கடந்த ஆண்டு காலாண்டில் 16 வது இடத்தில் இருந்த நார்வே தற்போது 6வது இடத்தை தக்க வைத்துள்ளது.
சராசரியாக 10 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் வீதம் வகுப்புகள் எடுக்கப்படுகிறது இந்த நாட்டில்.
நார்வேயின் கல்வி கொள்கை மக்களிடையே ஆழமாக வேரூன்றியுள்ளது, நார்வேயில் அவர்கள் எங்கு வாழ்கிறார்கள் அல்லது அவர்களின் கலாச்சார மற்றும் சமூக பின்னணி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தரமான கல்விக்கு சம உரிமை உண்டு என்று கூறப்படுகிறது.
6 முதல் 16 வயதுக்குட்பட்ட அனைவரும் கட்டாயம் பள்ளியில் சேர வேண்டும் எனவும். அனைத்து பொதுக் கல்வியும் இலவசம், பள்ளி வகுப்புகள் நார்வே மொழியிலேயே கற்பிக்கப்படுகின்றன என்று கூறுகிறது இந்த‌ சர்வே.

7. ஆரம்ப கல்வி, இடைநிலைக் கல்வி, மேலதிக கல்வி மற்றும் உயர் கல்வி என நான்கு முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு பிரிட்டன் ஏழாவது இடத்தில் உள்ளது.
இங்கிலாந்தில், 5 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 16 வயதிற்குட்பட்ட அனைவரும் பள்ளிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.​​ ஆங்கில மொழி, கணிதம், வரலாறு, உடற்கல்வி, புவியியல், வரலாறு மற்றும் இசை போன்ற பாடங்களில் குழந்தைகள் சில அடிப்படை அறிவை அறிமுகப்படுத்துகிறார்கள். 
அதுமட்டுமின்றி உலகப் புகழ்பெற்ற பர்மிங்காம் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் யார்க் பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களை கொண்ட யுனைடெட் கிங்டம் என்று அழைக்கப்படும் பிரிட்டன் கல்வியறிவு தரவரிசையில் ஏழாவது இடத்தில் உள்ளது.
அடுத்தடுத்த இடங்களில் 8 வதாக இஸ்ரேல்.9 வது இடத்தில் ஸ்வீடன். 10 வதாக சீனாவின் ஒரு பகுதியான ஹாங்காங் இடம்பெறுகிறது.

இந்த தர வரிசையில் முதல் 20 இடங்களில் கூட இந்தியா இடம்பெறாமல் 37வது இடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவில் கல்வி வியாபாரப் பொருளாக மாறி பல ஆண்டுகளாகி விட்டது.

அனைத்து நாடுகளிலும் தான் கல்வி வியாபாரம் நடைபெறுகிறது.
ஆனால். இந்தியாவில் கல்வியறிவை போதிப்பதை விட. கல்விக் கூடங்கள் பெயரில் அரசு மற்றும் தனியார் நிலங்களை ஆக்கிரமிக்கவே பெரும்பாலும் கல்வி நிறுவனங்கள் தோன்றுகிறன. 

அடுத்தடுத்ததாக. மாணவர்களின் கற்றல் மற்றும் புரிந்துகொள்ளும் திறமைகள் இங்கு ஆய்வுகள் செய்யப் படுவதில்லை.
மாறாக.
இங்குள்ள அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் அரசியல்வாதிகளின் பின்புலங்களில் நடத்தப் படுவதால்.
அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பெரும்பாலும் மூடு விழாவினை எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கின்றன.
சரி. தனியார் கல்வி நிறுவனங்கள் எப்படி கல்வி போதிக்கின்றன என்று பார்த்தால்.

தங்களது நிறுவனங்களின் தரம் குறையாத வண்ணம் கல்வி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டு தரச் சான்றிதழ் பெற்றுக் கொண்டு. நாளிதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் தங்கள் வியாபார நிறுவனங்களை விற்பனை செய்கின்றனர்.
நமது வருங்கால சந்ததியினரும் ஆட்டு மந்தைகள் போல குழுமி விடுவதால். கற்றல் திறனில்லாத ஆசிரியர் மூலம் புரிதல் திறனில்லாத மாணவன் உருவாகிறான். 

கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் கல்விக்கான இணக்கமான சூழல் இல்லாமை. அங்கீகரிக்கப்படாத மாணவர் திறமை. பள்ளிகள், கல்லூரிகள் போன்றவற்றின் கடுமையான போட்டி. நமது கல்வி முறை மதிப்பெண்களை விட தரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. 

பொருளாதாரம், தொழில் முனைவோர் மற்றும் , ஆளுமை, கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் தனிநபர் பாதுகாப்பு, தனிப்பட்ட சுதந்திரம் ஆகியவற்றைப் பொறுத்தவரை இந்தியா முதல் 10 நாடுகளுக்கு அருகில் கூட இல்லை என்பது வருத்தப்படக் கூடிய விஷயமாகும்..

மணியன் கலியமூர்த்தி.

Post Top Ad