ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிழை - Asiriyar.Net

Tuesday, July 9, 2019

ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிழை

ஐந்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில் பருவ காலம், சூரிய குடும்பம் பற்றி தவறாக அச்சிடப்பட்டுள்ளது.

அரசு வழங்கிய இலவச பாடப்புத்தகத்தில் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கிய கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான முதல் பருவம், தொகுதி 2 புத்தகத்தில் சமூக அறிவியல் பாடங்களில் பருவ நிலை மற்றும் சூரிய குடும்பம் குறித்து முற்றிலும் தவறான தகவல்கள் தரப்பட்டுள்ளன.ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை மழைக்காலம் என்பதற்கு பதில் டிசம்பர் முதல் பிப்ரவரி எனவும், முன்பனிக்காலம் டிசம்பர் முதல் பிப்ரவரி என்பதற்கு பதிலாக ஜூன் முதல் செப்டம்பர் எனவும், பின் பனிக்காலம் பிப்ரவரி முதல் ஏப்ரல் என்பதற்கு பதிலாக அக்டோபர் முதல் நவம்பர் வரை என குறிப்பிட்டுள்ளனர். 


சூரிய குடும்ப வரைபடத்தில் சூரியனுக்கு அருகில் உள்ள கோள்களை வரிசைப்படி குறிப்பிடாமல் மாற்றி அச்சிட்டுள்ளனர். இது போன்று பல குழப்பங்கள் உள்ளன.திருத்தி கற்பிக்க உத்தரவு: ஆசிரியர் ஒருவர் கூறியது: புத்தகம் அச்சிடுவதில் பிழை ஏற்படுத்திவிட்டதால், பருவநிலை மற்றும் சூரிய குடும்பம் குறித்த பாடத்தை ஆசிரியர்கள் திருத்தி சரியான முறையில் கற்பிக்க வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவற்றை மாற்றி சொல்லித்தருகிறோம், என்றார்.

Post Top Ad