“அரசின் முடிவுகளை எதிர்த்து ஆசிரியர்கள் வழக்குத் தொடர்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்” – ஐகோர்ட் நீதிபதி காட்டம் !! - Asiriyar.Net

Saturday, July 13, 2019

“அரசின் முடிவுகளை எதிர்த்து ஆசிரியர்கள் வழக்குத் தொடர்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்” – ஐகோர்ட் நீதிபதி காட்டம் !!இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிகளில் நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பார்த்திபன் கூறியதாவது:-

சமீபகாலமாக அரசின் முடிவுகளை எதிர்த்து ஆசிரியர்கள் வழக்குத் தொடர்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இது வேதனையாக உள்ளது.  அங்கன்வாடி மையங்களில் பணியாற்றினால் கவுரவ குறைச்சலா? 

அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை தொடங்கியுள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு பாராட்டுகள். ஏழை, எளிய பெற்றோர்கள் பயனடையும் வகையில் அரசு எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை தொடங்கியுள்ளது வரவேற்கத்தக்கது.

நீதிபதி பார்த்திபன் கூறினார். 

Post Top Ad