20 மாணவர்களுக்கு கீழ் உள்ள பள்ளிகள் அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்க வேண்டும் - புதிய கல்விக்கொள்கை - Asiriyar.Net

Wednesday, July 24, 2019

20 மாணவர்களுக்கு கீழ் உள்ள பள்ளிகள் அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்க வேண்டும் - புதிய கல்விக்கொள்கை20 மாணவர்களுக்கு கீழ் உள்ள பள்ளிகள் "பொருளாதார நலிவடைந்த பள்ளிகள்" என்று புதிய கல்விக்கொள்கை கூறுகிறது. அப்பள்ளிகளை அருகில் உள்ள பெரிய பள்ளிகளுடன் இணைக்க வேண்டும் என்று கூறுகிறது பு.க.கொ.

இதனால் ஒரு தரப்பு மாணவர்கள் தனியார் பள்ளிகளை நோக்கி செல்வார்கள்.அவர்களின் பெற்றோர் கல்விக்காக கடன் வாங்கும் சூழல் ஏற்படும்.

மற்றொரு தரப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் இடைநிற்றல் ஏற்படும்.

புதிய கல்விக்கொள்கையை திருத்துவதை விட திரும்பப்பெற போராடுவோம்...

Post Top Ad