பள்ளிகளில், 16 ஆயிரத்து, 412 ஆசிரியர்கள் உபரியாக உள்ளதால், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை, புதிதாக நியமிக்க இயலாது,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, July 3, 2019

பள்ளிகளில், 16 ஆயிரத்து, 412 ஆசிரியர்கள் உபரியாக உள்ளதால், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை, புதிதாக நியமிக்க இயலாது,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர்



பள்ளிகளில், 16 ஆயிரத்து, 412 ஆசிரியர்கள் உபரியாக உள்ளதால், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை, புதிதாக நியமிக்க இயலாது,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.சட்டசபையில் நடந்த விவாதம்: காங்., - பிரின்ஸ்: அரசு பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் வித்தியாசம் உள்ளது. தனியார் பள்ளி மாணவர்கள், காலை, 7:00 மணிக்கு சென்று, இரவு, 8:00 மணிக்கு, வீடு திரும்புகின்றனர். அங்கு, அடிமைகள் போல படிக்க வைக்கப்படுகின்றனர். மாணவர்கள், கஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.அமைச்சர் செங்கோட்டையன்: இப்புகார் குறித்து, துறையில் ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.பிரின்ஸ்: அரசு பள்ளிகளில், 'ஸ்மார்ட்' வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.


பல பள்ளிகளில் போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. தனியார் பள்ளிகளில், அதிக கட்டணம், நன்கொடை வசூலிக்கப்படுகிறது.செங்கோட்டையன்: தனியார் பள்ளிகளின், கட்டணங்களை வரைமுறை செய்வதற்காக, குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின், கட்டண விபரங்கள், முன்னர், தலைமை ஆசிரியர்களின் அறைகளில் மட்டுமே வைக்கப்பட்டு இருந்தது. தற்போது, பெற்றோர்கள் அறியும் வகையில், பள்ளி வளாகத்தில், கட்டண விபரங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.பிரின்ஸ்: ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, உடனடியாக, அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.செங்கோட்டையன்: அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து, 412 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். எனவே, அதற்கு மேல், ஆசிரியர்களை நியமிக்க இயலாது.இவ்வாறு, விவாதம் நடந்தது.

Post Top Ad