TNTET லிருந்து விலக்கு: Minorities / Non-minorities பாகுபாடுகள் நீக்க கோரிக்கை! - Asiriyar.Net

Saturday, December 1, 2018

TNTET லிருந்து விலக்கு: Minorities / Non-minorities பாகுபாடுகள் நீக்க கோரிக்கை!




TNTET லிருந்து விலக்கு: Minorities / Non-minorities பாகுபாடுகள் நீக்க கோரிக்கை
TNTET லிருந்து
சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்களுக்கு முழுவதும் விலக்கு அளித்தது போல, அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் அற்ற பள்ளி ஆசிரியர்களுக்கும் TNTET லிருந்து முழுவதும் விலக்கு அறிவிப்பு அரசாணை விரைந்து வெளிவிட வேண்டும் என பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக TNTET நிபந்தனையுடன் பணி புரியும் சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்களுக்கு TET REFRESHMENT COURSE நடத்தப்பட்டு வருகிறது. இது TET தேர்ச்சிக்கு சமமாக ஏற்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் இந்த சிக்கலுக்கு நான்கு மாதத்தில் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. இது சம்மந்தமாக 16/11/2012 க்கு முன்பு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் TNTET முழு விலக்கு அரசாணைக்கு காத்துக் கொண்டுள்ள நிலையில் இந்த பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது

Post Top Ad