புரிந்து படிக்கும் கற்பித்தல் நுட்பம்: மாணவர்கள் புரிந்து படிக்கும் கற்பித்தல் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள வேண்டும் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, December 20, 2018

புரிந்து படிக்கும் கற்பித்தல் நுட்பம்: மாணவர்கள் புரிந்து படிக்கும் கற்பித்தல் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள வேண்டும்





புரிந்து படிக்கும் கற்பித்தல் நுட்பம்: மாணவர்கள் புரிந்து படிக்கும் கற்பித்தல் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள வேண்டும்," என முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி தெரிவித்தார் மதுரையில் ஒருங்கிணைந்த இடைநிலை கல்வி (எஸ்.எம்.எஸ்.ஏ.,) சார்பில் மாநில அளவிலான கற்றல் மேம்பாடு அடைதல் குறித்த பயிலரங்கை துவக்கி வைத்து அவர் பேசுகையில், "புரிந்து படிக்கும் திறனை மாணவர் பெற்றால் தான் கல்வி பயனுள்ளதாக இருக்கும்
அதற்கான கற்பித்தல் நுட்பங்களை ஆசிரியர் வகுப்பறைகளில் கையாள வேண்டும். மாணவருக்குள் மறைந்துள்ள திறமையை வெளிக்கொணர வேண்டும்," என்றார். 70 முதுநிலை ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாணவர்களின் குழு மனப்பான்மை, புரிந்து படித்தல், பங்கேற்க செய்தல், கணிதத்தில் தீர்வு காணுதலை கற்பித்தல் குறித்து திட்ட ஆலோசகர் அய்யராஜூ விளக்கினார். உதவி திட்ட அலுவலர் ஜான் ஏற்பாடு செய்தார். ஜன.,21 வரை இப்பயிலரங்கு நடக்கிறது

Post Top Ad