ஆன்லைன் மாணவர் வருகைப் பதிவிடுவதில் சிக்கல் - Asiriyar.Net

Thursday, December 20, 2018

ஆன்லைன் மாணவர் வருகைப் பதிவிடுவதில் சிக்கல்


கிராமப்புற பள்ளிகளில் ஸ்மார்ட் போனில் 'இன்டர்நெட்' கிடைக்காததால் செயலியில் மாணவர்கள் வருகையை பதிவு செய்வதில் சிக்கல் நீடிக்கிறது.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகையை பதிவு செய்ய 'அட்டன்டென்ஸ்' செயலி உருவாக்கப்பட்டது.

இச்செயலியை அனைத்து ஆசிரியர்களும் தங்களது 'ஸ்மார்ட் போனில்' பதிவிறக்கம் செய்து, மாணவர்கள் வருகையை பதிவு செய்ய கல்வித்துறை உத்தரவிட்டது.

பள்ளி நாளில் காலை 9:30, பகல் 2:00 மணிக்கு பதிய வேண்டும்.


கிராமப்புற பள்ளிகளில் 'இன்டர்நெட்' கிடைக்கவில்லை.

மேலும் ஆசிரியர்கள் பலரிடம் 'ஸ்மார்ட் போன்' இல்லை.

இதனால் வருகையை செயலியில் பதிவதில் சிக்கல் நீடிக்கிறது.

Post Top Ad