கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிதியுதவி அளித்த, ஐந்தாம் வகுப்பு மாணவியை பாராட்டி, முதல்வர் பழனிசாமி சைக்கிள் வழங்கி பாராட்டு - Asiriyar.Net

Tuesday, December 4, 2018

கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிதியுதவி அளித்த, ஐந்தாம் வகுப்பு மாணவியை பாராட்டி, முதல்வர் பழனிசாமி சைக்கிள் வழங்கி பாராட்டு





கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிதியுதவி அளித்த, ஐந்தாம் வகுப்பு மாணவியை பாராட்டி, முதல்வர் பழனிசாமி சைக்கிள் வழங்கினார்.சேலம், கிச்சிப்பாளையம், ஜெ.ஜெ., நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது மகள், அக் ஷயாஸ்ரீ. சேலம், ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளிக்குச் செல்ல, சைக்கிள் வாங்குவதற்காக, அவரது பாட்டி வழங்கிய பணத்தை சேமித்து வந்தார்.சேமிப்பு பணம், 520 ரூபாயை, சைக்கிள் வாங்காமல், 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். இதையறிந்த முதல்வர் பழனிசாமி, நேற்று மாணவியை தலைமை செயலகம் வரவழைத்து பாராட்டி, புதிய சைக்கிள் வழங்கினார்.

Post Top Ad