ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடை கோரிய மனு : உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 1 மணிக்கு விசாரணை - Asiriyar.Net

Monday, December 3, 2018

ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடை கோரிய மனு : உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 1 மணிக்கு விசாரணை




ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ள போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கஜா புயல் பாதிப்பு, பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் சூழல் உள்ளிட்டவை இந்த போராட்டத்தால் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாக சட்டப்பஞ்சாயத்து இயக்கம் தாக்கல் செய்த மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசு ஊழியர்களின் போராட்டம் விதிமுறைக்கு எதிரானது என மனுவில் புகார்

அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு குழுவான ஜாக்டோ-ஜியோ பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.

Post Top Ad