NMMS தேர்வு: நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியீடு - Asiriyar.Net

Friday, November 23, 2018

NMMS தேர்வு: நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியீடு





தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை தேர்வுகளுக்கு (என்.எம்.எம்.எஸ்.,) விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
எட்டாம் வகுப்பு மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான என்.எம்.எம்.எஸ். தேர்வு வரும் டிச.1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான நுழைவுச் சீட்டுகள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
எனவே, பள்ளி தலைமையாசிரியர்கள் தங்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள யூஸர் ஐ.டி, பாஸ்வேர்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி நுழைவுச் சீட்டுகளை நவ.22 வியாழக்கிழமை முதல் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

Post Top Ad