ரூ.35-க்கு ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் சேவை துண்டிப்பு - ஏர்டெல், வோடோபோன் அறிவிப்பு - Asiriyar.Net

Friday, November 23, 2018

ரூ.35-க்கு ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் சேவை துண்டிப்பு - ஏர்டெல், வோடோபோன் அறிவிப்பு


குறைந்தபட்ச தொகையான ரூ.35-க்கு மொபைல் ரீசார்ஜ் மேற்கொள்ளவில்லை என்றால் சேவையை துண்டிக்கும் முடிவை ஏர்டெல், வோடோபோன் நிறுவனம் எடுத்துள்ளது.

ஜியோ நிறுவனம் வழங்கும் அதிரடி சலுகைகளால், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை பயன்படுத்துவதில்லை. இதனால் ஏற்படும் பெரும் வருமான இழப்பை தடுக்க, இந்த திட்டத்தை ஏர்டெல், வோடோபோன் நிறுவனம் அமல்படுத்த உள்ளது. குறைந்தபட்ச தொகையான 35 ரூபாய்க்கு ரிசார்ஜ் செய்யவில்லை என்றால், இனி இன்காமிங் கால் வசதியும் இருக்காது.இதனால் 20 கோடி வாடிக்கையாளர்களின் தொலைத்தொடர்பு  சேவை துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Post Top Ad