ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவது குறித்து திருத்தம் செய்யப்பட்ட தெளிவுரை - CEO Proceedings. - Asiriyar.Net

Post Top Ad

Sunday, May 17, 2020

ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவது குறித்து திருத்தம் செய்யப்பட்ட தெளிவுரை - CEO Proceedings.


பத்தி எண் .7 ல் உள்ள அறிவுரைகளை கீழ்கண்டவாறு திருத்தி வாசிக்குமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் அவர்கள் பணிபுரியும் மாவட்ட இருப்பிட முகவரியில் உள்ளனரா என்பதனை 18.05.2020 க்குள் பள்ளி தலைமையாசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தில் இருப்பின் அவர்கள் 19.05.2020 க்குள் அவர்கள் பணிபுரியும் மாவட்ட இருப்பிடத்திற்கு வருகை தர அறிவுறுத்தப்பட வேண்டும். 

அரசாணை எண்.239 Revenue & disaster Management ( DM - II ) Dept நாள் 15.05.2020 ல் அறிவுறுத்தப்பட்டுள்ள விகிதாச்சாரத்தின் படி 21.05.2020 முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தந்து தேர்வு தொடர்பான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.


மேலும் தங்கள் பள்ளியில் 10,11,12 ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களில் இருப்பின் அவர்கள் சார்பான விவரத்தினை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் தயாரித்து 18.05.2020 பிப 5.00 மணிக்குள் சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகங்களில் வேண்டுமென பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

மேலும் மேற்கண்ட படிவத்தின் படி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள 10,11,12 ம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கையினை மட்டும் 17.05.2020 முப 10.00 மணிக்குள் சார்ந்த பள்ளி ஆசிரியர் பயிற்றுநரிடம் கைப்பேசி மூலம் தெரிவிக்க வேண்டும் எனவும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
Recommend For You

Post Top Ad