8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை: வானிலை ஆய்வு மையம் தகவல் - Asiriyar.Net

Post Top Ad

Sunday, May 10, 2020

8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 தமிழகத்தில் கோடை காரணமாக சில இடங்களில் 104 டிகிரி வெயில் வரை வெயில் காணப்படுகிறது. அதே நேரத்தில் சில இடங்களில் வெப்பச் சலனம் காரணமாக மழையும் பெய்து வருகிறது.  

அதிகபட்சமாக தமிழகத்தில் நேற்று மயிலாடியில் 110 மிமீ மழை பெய்துள்ளது. குளித்துறை 80 மிமீ, குமரி 70 மிமீ, கமுதி 40 மிமீ, தக்கலை, இரணியல், பெரியாறு 20 மிமீ, குளச்சல் 10 மிமீ மழை பெய்துள்ளது. இருப்பினும்குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதைத் தொடர்ந்து தற்போதும் வெப்ப சலனம் நீடித்து வருவதால், கோவை, நீலகிரி, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். 


திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று  ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன்கூடிaய கனமழை பெய்யும்.   பிற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். இந்நிலையில் குமரிக்கடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவை ஒட்டிய  பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது.

 தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம், தர்மபுரி, வேலூர், மாவட்டங்கள் மற்றும் திருத்தணி ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 104 டிகிரி வரை வெயில் இருக்கும் என்பதால் பொதுமக்கள் மதியம் 3 மணி வரை வெளியில் வர வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும்.

Recommend For You

Post Top Ad