10 வகுப்பு மாணவி எரித்துக் கொன்ற மனித மிருகங்களுக்கு தூக்கு தண்டனை: கட்சி தலைவர்கள் கருத்து - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, May 12, 2020

10 வகுப்பு மாணவி எரித்துக் கொன்ற மனித மிருகங்களுக்கு தூக்கு தண்டனை: கட்சி தலைவர்கள் கருத்து



விழுப்புரத்தில் பள்ளி மாணவி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்டுள்ளதற்கு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.


முதல்வர், இ.பி.எஸ் : ரூ.5 லட்சம் நிவாரணம் சிறுமியின் குடும்பத்திற்கு, முதல்வர், இ.பி.எஸ்., இரங்கல் தெரிவித்துள்ளார். இச்செயலை வன்மையாக கண்டித்துள்ளதுடன், இதில் ஈடுபட்டோர் மீது, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தெரிவித்து உள்ளார். 

மேலும், சிறுமியின் குடும்பத்திற்கு, பொது நிவாரண நிதியில் இருந்து, 5 லட்சம் ரூபாய் வழங்கவும், முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், கைது செய்யப்பட்டுள்ள இருவரையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட, அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், இ.பி.எஸ்., ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

மு.க.ஸ்டாலின்: பள்ளி மாணவி ஜெயஸ்ரீயின் கை, கால்களைக் கட்டிப்போட்டு, அதிமுகவைச் சோ்ந்த கிளைக் கழகச் செயலாளா் கலியபெருமாள் மற்றும் முன்னாள் கவுன்சிலா் முருகன் ஆகியோா் தீ வைத்துக் கொளுத்திய சம்பவம் தமிழகத்தையே பதற வைக்கிறது. இந்த கொடூர கொலைக் குற்றத்தில் தொடா்புடையவா்களுக்கு காவல்துறை உச்சபட்ச தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும்.


விஜயகாந்த் (தேமுதிக): தந்தையிடம் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சிறுமியை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியது எந்த வகையில் நியாயம்? இனிவரும் காலங்களில் இதுபோன்ற செயல்கள் எங்கும் நடைபெறாத வண்ணம் அந்த மனித மிருங்கங்களுக்கு, உச்சபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.

வைகோ (மதிமுக): மாணவி எரித்துக் கொன்ற சம்பவம் வேதனையளிக்கிறது. இக்கொடூரச் செயல் செய்தவா்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும்.





ராமதாஸ் (பாமக): மாணவி ஜெயஸ்ரீ முன்பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியளிக்கிறது. ஆயிரம் முன்பகை இருந்தாலும் மனிதமும், இதயமும் உள்ளவர்களால் வாழ வேண்டிய சிறுமியை உயிருடன் எரிக்கும் குரூரத்தை அரங்கேற்ற முடியாது. இதற்கு காரணமானவர்களுக்கு விரைந்து தண்டனை வழங்கப்பட வேண்டும்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: ஜெயஸ்ரீ பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி. கடந்த 10ம் தேதி எரித்து கொல்லப்பட்டார். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது காவல்துறை கொலை வழக்குப் பதிவு செய்து பிணையில் வெளிவர முடியாதபடி சிறையில் அடைக்க வேண்டும்.

கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): பள்ளி மாணவி எரித்துக் கொல்லப்பட்ட மனிதத் தன்மையற்ற கொடூரமான செயலை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவா்கள் மீது காவல்துறை கொலை வழக்குப் பதிவு செய்து பிணையில் வெளிவர முடியாதபடி சிறையில் அடைக்க வேண்டும்.


இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): இந்தக் கொடிய குற்றத்தை செய்த குற்றவாளிகள், இதற்குப் பின்பலமாக இருந்த அரசியல் செல்வாக்கு உடையவா்கள் என அனைவரும் கைது செய்து, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடாமல் தண்டிக்கப்பட வேண்டும்.

பாஜ தலைவர் முருகன்: மாணவி ஜெயஸ்ரீ  பட்டப்பகலில் சமூக விரோதி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப் பட்டிருக்கிறார். கைதானவர்களின் வயது 51 மற்றும் 60 எனத் தெரிகிறது. வயது முதிர்ந்தும் சிந்தனை முதிராக மிருகங்களாய் நடந்துள்ளனர். எனவே தமிழக அரசு இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் மூலம் விரைந்து நடத்தி குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்.

Post Top Ad