விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு - Asiriyar.Net

Post Top Ad

Wednesday, October 9, 2019

விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்புவிஜயதசமி விடுமுறை முடிந்து, இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப் படுகின்றன. தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, அக்., 3ல் வகுப்புகள் துவங்கின. இரண்டு நாட்கள் வகுப்புகள் நடந்த நிலையில், விஜயதசமிக்காக மீண்டும் விடுமுறை விடப்பட்டது. அக்., 5 முதல் நேற்று வரை, நான்கு நாட்கள், பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், இன்று முதல் பள்ளிகள் திறக்கப் படுகின்றன. இந்த மாதம், மொத்தம், 22 நாட்கள் மட்டுமே, வேலை நாட்களாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதில், வரும், 12ம் தேதி, சனிக்கிழமையும் வேலை நாளாக அறிவிக்கப் பட்டுள்ளது.

Recommend For You

Post Top Ad