கூகிள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதா வாட்சப்? - Asiriyar.Net

Post Top Ad

Friday, October 11, 2019

கூகிள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதா வாட்சப்?
கூகிள் ப்ளே ஸ்டோரிலிருந்து வாட்சப் ஆப் நீக்கப்பட்டிருப்பதாக பயனாளர்கள் புகார் அளித்துள்ளனர்.

உலகின் பல கோடி பயனாளர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் செயலி வாட்சப் என்பது அனைவரும் அறிந்ததே. பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்சப் கூகிள் ப்ளே ஸ்டோரிலிருந்து மாயமாகியுள்ளதாக சான் ஃப்ரான்சிஸ்கோவைச் சேர்ந்த பயனாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே வாட்சப்பை பயன்படுத்திவரும் பயனாளர்கள் யாருக்கும் இந்த பிரச்சனை இல்லை என்றும், புதிதாக வாட்சப் செயலியை இன்ஸ்டால் செய்ய விரும்புபவர்கள், கூகிள் ப்ளே ஸ்டோரில் சென்று தேடினால் வாட்சப் செயலி அதில் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே வாட்சப்பில் கணக்கு வைத்திருந்தவர்கள், ஏதாவது காரணமாக அன் இன்ஸ்டால் செய்துவிட்டாலும், கூகிள் ப்ளேஸ்டோரில் "Previously installed app" என்ற பகுதியில் இருந்து வாட்சப் செயலியை தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. வாட்சப் செயலியை முற்றிலுமாக ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கவும் இல்லை, பேக் லிஸ்டிலும் சேர்க்கவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

கூகிள் வாட்சப் மீது எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு என்ன காரணம் என்பது குறித்து தெளிவான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. எனினும் வாட்சப் பிசினஸ் செயலி இன்னும் கூகிள் ப்ளே ஸ்டோரில் உள்ளது.

Recommend For You

Post Top Ad