5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வழிமுறைகள்.. பள்ளிக் கல்வித்துறை வெளியீடு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, October 30, 2019

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வழிமுறைகள்.. பள்ளிக் கல்வித்துறை வெளியீடு



5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த வழிமுறைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் அரசு அறிவித்தது. இதற்காக அரசாணையும் தமிழக அரசு வெளியிட்டது.

இந்நிலையில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த வழிமுறைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

5 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு மையம் 1 கிலோமீட்டர் தொலைவுக்குள்ளாக இருக்க வேண்டும்.

8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு மையம் 3 கிலோமீட்டர் தொலைவுக்குள்ளாகவும் இருக்க வேண்டும்.

5 ஆம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய மூன்று பாடங்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும்.

8 ஆம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் என 5 பாடங்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும்.

மொத்தம் 60 மதிப்பெண்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும். மீதமுள்ள 40 மதிப்பெண்கள் மாநில பாடத்திட்டத்தின் முப்பருவ முறையை பின்பற்றப்படும். இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Post Top Ad