Voter Helpline' ஆப்... வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வது, பெயர் சேர்ப்பது இனி எளிது! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, September 13, 2019

Voter Helpline' ஆப்... வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வது, பெயர் சேர்ப்பது இனி எளிது!



உள்ளாட்சித் தேர்தல் தொடங்கி மக்களவை தேர்தல் வரை எதில் வாக்களிக்க வேண்டுமென்றாலும் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தயாரிக்கப்படும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பது அவசியம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தப் பட்டியலில் பெயரைச் சேர்க்க வேண்டுமென்றாலோ, அல்லது ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டுமென்றாலோ குறிப்பிட்ட நாள்களில் நடத்தப்படும் முகாம்களுக்குச் செல்வது மட்டுமே ஒரே வழியாக இருந்து வந்தது.

 Polling Booth
அதன் பின்னர் ஆன்லைன் மூலமாகவும், இ-சேவை மையங்கள் மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்ப்பதற்கான வழிகள் கொண்டு வரப்பட்டன.



தற்போது அதை மேலும் எளிமையாக்கியிருக்கிறது தேர்தல் ஆணையம். வாக்காளர்களே பிழைகளை எளிதாகத் திருத்தம்செய்ய வசதியாக, 'VOTER HELPLINE' என்கிற ஸ்மார்ட்போன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக வாக்களர் பட்டியலில் திருத்தம் செய்யும் வேலையைச் சில நிமிடங்களில் முடித்து விடலாம்.

பதிவிறக்கம் செய்வது எப்படி?

'Voter Helpline' செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோர் மூலமாக ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.


VOTER HELPLINE APP
பதிவிறக்கம் (இன்ஸ்டால்) முடிந்த பிறகு இந்தச் செயலியினுள் சென்று விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை டிக் செய்தபின்னர் வழக்கமான ஆப்களைப் போல பயன்படுத்தலாம்.

என்னென்ன வசதிகள் இருக்கின்றன?

வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதை தகவல்களை உள்ளீடு செய்தோ EPIC எண்ணைப் பதிவு செய்தோ ஆதார் பார்கோடை (Barcode) ஸ்கேன் செய்தோ தெரிந்துகொள்ள முடியும்.

வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயரைச் சேர்க்க முடியும் (Form6).

வாக்காளர் பட்டியலிலிருந்து பெயரை நீக்க முடியும்.

வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளைத் திருத்தம் செய்யமுடியும் (Form 8).


VOTER HELPLINE APP
இடமாற்றம் (Shifting/Transfer) காரணமாக-வாக்குச் சாவடியை மாற்றம் செய்துகொள்ளலாம் (Form 8A)

மாற்று வாக்காளர்கள் அடையாள அட்டை (Duplicate Card) பெறலாம் (Form 001).

உங்களது விண்ணப்பத்தின் நிலையை (Status Of Application) அறிந்துகொள்ள முடியும்.

புகார்களைப் பதிவு செய்யவும், புகாரின் நிலையைத் தெரிந்துகொள்ளவும், புகாருக்கான நடவடிக்கைகளைத் தெரிந்துகொள்ளவும் முடியும்.

இதுமட்டுமன்றி ஆப்ஃலைன் மூலமாக விண்ணப்பிக்க விரும்புபவர்களும் இந்தச் செயலியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்களுக்குத் தேவைப்படும் படிவங்களைத் தரவிறக்கம் (Download) செய்து கொள்ளவும் முடியும்.

என்னென்ன ஆவணங்கள் தேவை?

பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வங்கிக் கணக்குப் புத்தகம், பான் கார்டு போன்றவற்றை ஆவணங்களாகப் பயன்படுத்தலாம்.

தேவைப்படும் ஆவணங்களை போனிலேயே புகைப்படம் எடுத்து அப்லோடு செய்து கொள்ளலாம். புகைப்படங்களை அதில் குறிப்பிடப்பட்டுள்ள அளவில் மட்டுமே அப்லோடு செய்ய முடியும்.

செயலியைப் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை

முதலில் என்ன சேவை தேவைப்படுகிறதோ அதைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். முதல் படியில் மாநிலம், மாவட்டம், பாராளுமன்ற/நாடாளுமன்றத் தொகுதிகள் போன்றவற்றைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும். இது பொதுவானதாக இருக்கிறது.


அதன் பின்னர் ஒவ்வொரு சேவையிலும் அதற்குத் தகுந்தவாறு 4 முதல் 7 நிலைகள் (Steps)இருக்கும். அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களைச் சரியாக உள்ளீடு செய்தால் மட்டும் போதுமானது.

உள்ளீடு செய்யப்படும் தகவல்கள் சரியானதாக இருக்கவேண்டும். பதிவேற்றம் செய்யப்படும் ஆவணங்களும் தெளிவாக இருப்பது அவசியம். ஏனெனில், வாக்காளர்கள் அப்லோடு செய்யும் ஆவணங்கள் வாக்காளர் பட்டியல் களப்பணியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் வீடுகளுக்கு வந்து அவற்றைச் சரிபார்ப்பார்கள். அனைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே திருத்தங்கள் அங்கீகரிக்கப்பட்டுச் சரி செய்யப்படும் இல்லையெனில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

இந்தச் செயலி மக்கள் எளிதாக, பிறர் உதவியின்றி கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 15 நாள்களில் உங்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சென்னை மாநாராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்திருக்கிறார்.













Post Top Ad