ப்ளே ஸ்டோரில் மீண்டும் கேம்ஸ்கேனர் செயலி! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, September 9, 2019

ப்ளே ஸ்டோரில் மீண்டும் கேம்ஸ்கேனர் செயலி!



ப்ளே ஸ்டோரில் மீண்டும் கேம்ஸ்கேனர் செயலி! பாதுகாப்பு குறைபாட்டால் நீக்கம் செய்யப்பட்ட கேம்ஸ்கேனர் செயலியை கூகுள் மீண்டும் ப்ளே ஸ்டோரில் இணைத்துள்ளது. 

தற்போது பாதுகாப்பு குறைபாடுகள் சரிசெய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது 100 மில்லியனுக்கும் அதிகமானோரால் தரவிறக்கம் செய்யப்பட்ட பிரபல செயலி கேம்ஸ்கேனர். இந்தச் செயலியை பயன்படுத்தி ஸ்கேன் செய்யப்படும் புகைப்படங்களை பிடிஎஃப் ஆக எளிதாக மாற்றலாம். இந்நிலையில் சமீபத்தில் இந்தச் செயலியை கூகுள் நீக்கியது. மால்வேர் (வைரஸ்) தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து கூகுள் நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் கேம்ஸ்கேனர் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள அந்நிறுவனம், கேம்ஸ்கேனர் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும். தற்போது இது பயன்படுத்த பாதுகாப்பானது என குறிப்பிட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களில் கவனம் செலுத்தும் கூகுள், பாதுகாப்பு குறைபாடுகள் கொண்ட செயலிகளை அதிரடியாக நீக்கி வருகிறது. சமீபத்தில் சூப்பர் செல்ஃபி, சிஓஎஸ் கேமரா, பாப் கேமரா, மற்றும் ஒன் ஸ்ட்ரோக் லைன் பஸில் உள்ளிட்ட 80க்கும் அதிகமான செயலிகளை கூகுள் நீக்கியது குறிப்பிடத்தக்கது.

Post Top Ad