தமிழகத்தில் அடுத்தாண்டு முதல் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தோவு - Asiriyar.Net

Post Top Ad

Friday, September 13, 2019

தமிழகத்தில் அடுத்தாண்டு முதல் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தோவு

தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படியே தேர்வு நடைபெறும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சி.உஷா ராணி வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

நிகழ் கல்வியாண்டு (2019-20) முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே, புதிய பாடத்திட்டத்தின்படியே அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தனித்தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும். ஏற்கெனவே பழைய பாடத் திட்டத்தில் தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்கள் தோல்வியுற்ற பாடங்களை மட்டும் புதிய பாடத்திட்டத்தில் எழுதிக் கொள்ளலாம். இதற்கான தேர்வு கால அட்டவணை தற்போது வெளியிடப்படுகிறது. அதன்படி ஏப்ரல் 2-ஆம் தேதி தமிழ், ஏப்ரல் 3- ஆங்கிலம், ஏப்ரல் 7-கணிதம், ஏப்ரல் 8-அறிவியல், ஏப்ரல் 9- சமூக அறிவியல் ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுகள் காலை 10 நண்பகல் 12 மணி வரை நடைபெறவுள்ளது.

Recommend For You

Post Top Ad