School Morning Prayer Activities - 28.02.2019 - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, February 28, 2019

School Morning Prayer Activities - 28.02.2019

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்



திருக்குறள் : 140

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.

உரை:
உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.

பழமொழி:

Laugh away your fears

இடுக் கண் வருங்கால் நகுக

பொன்மொழி:

நோய் வருவரை உண்பவன், உடல் நலமாகும் வரை உண்ணா நோன்பு மேற்கொள்ள வேண்டிவரும்.

- தாமஸ் புல்லர்

இரண்டொழுக்க பண்பாடு :

1) அனை‌த்து மக்களும் கடவுளின் சாயலே எனவே அனைவரையும் மதித்து நடப்பேன்.

2) தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள நீதி போதனைகளை என்னால் முடிந்த அளவு கடை பிடிப்பேன்.


பொது அறிவு :

1) மலரின் எந்தப்பகுதி விதையாகிறது ?

 சூல்.

2) பிறந்தது முதல் இறப்பது வரை தூங்காத பிராணி எது ?

எறும்பு

நீதிக்கதை :

ஒரு காட்டில் ஒரு நாள் அடை மழை பெய்துக் கொண்டிருந்தது. அப்போது அந்தக் காட்டில் இருந்த ஒரு குரங்கு மழையில் நனைந்து நடுங்கியவாறு ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்றது.

அந்த மரத்தில் இருந்த பறவை ஒன்று கூடு கட்டி தன் குஞ்சுகளுடன் மழைக்கு நனையாது பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டிருந்தது.


மரத்தடியில் குரங்கு நனைந்து நடுங்குவதைப் பார்த்ததும் பறவைக்கு குரங்கு மீது இரக்கம் வந்தது.  மனம் பொறுக்காமல் ‘ குரங்காரே..என்னைப்பாரும்…வெய்யில் மழையிலிருந்து என்னையும் என் குஞ்சுகளையும் காப்பாற்றிக்கொள்ள கூடு கட்டியிருக்கிறேன்.  அதனால் தான் இந்த மழையிலும் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறறோம். நீரும் அப்படி ஒரு பாதுகாப்பான கூடு செய்திருக்கலாமே. கூடு இருந்தால் நீர் இப்படி நனைய மாட்டீர் அல்லவா? என்று புத்தி சொன்னது. இதனைக் கேட்ட குரங்காருக்கு கோபம் சீறிக் கொண்டு வந்தது. உனைவிட நான் எவ்வளவு வலுவானவன். எனக்கு நீ புத்தி சொல்கிறாயா?….

இப்போ உன்னையும் உன் குஞ்சுகளையும் என்ன செய்கிறேன் பார்’ என மரத்தில் விடுவிடு என ஏறி பறவையின் கூட்டை பிய்த்து எறிந்தது.

பறவைக்கு அப்போதுதான் புரிந்தது’ அறிவுரைகளைக்கூட…..அதைக்கேட்டு நடப்பவர்களுக்குத்தான் சொல்லவேண்டும்  என்று.

துஷ்டனுக்கு நல்லது சொல்லப் போய் தனக்கும் தன் குஞ்சுகளுக்கும் பாதுகாப்பாக இருந்த கூட்டை இழந்து நனைகின்றோமே என மனம் வருந்தியது.


நாமும்…ஒருவருக்கு அறிவுரை வழங்குமுன் அவர் அதனை ஏற்று நடப்பாரா என்று புரிந்துகொண்ட பின்னரே அறிவுரை வழங்கவேண்டும்.


இன்றைய செய்தி துளிகள் : 

1) அரசுப் பள்ளிகளில் ஏப்ரல் இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப்பு பணிகள் முடிக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

2) தேர்வில், 'ஸ்கெட்ச், கிரயான்சு'க்கு தடை : மாணவர்களுக்கு தேர்வு துறை எச்சரிக்கை

3) திருப்பூர் மாநகராட்சி பள்ளி மாணவியின், 'காயின் வெண்டிங் மிஷின்' கண்டுபிடிப்புக்கு, 'கூகுள்' நிறுவனம், சிறப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4) ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி மீண்டும் தாக்குதல்

5) சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டுப் போட்டி : இந்தியாவின் மனு பேகர், சௌராப் சவுதாரி தங்கப்பதக்கம்

Post Top Ad