LKG, UKG திட்டம் - இடைநிலை உபரி ஆசிரியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, February 21, 2019

LKG, UKG திட்டம் - இடைநிலை உபரி ஆசிரியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்!


தமிழகத்தில் 2,380 அங்கன்வாடி மையங்களை எல்கேஜி வகுப்புகளாக மாற்றி முதல்வர் அறிவித்த திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு வரவில்லை. அங்கு மாறுதல் செய்யப்பட்ட இடைநிலை உபரி ஆசிரியர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

 தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் ேசர்க்கை எண்ணிக்கை குறைவதை தடுக்க எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் ெதாடங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. பள்ளிகளுடன் இணைந்த 2380 அங்கன்வாடி மையங்கள் எல்கேஜி யுகேஜி வகுப்புகளாக மாறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.  

கடந்த ஜனவரி 21ம் தேதி முதல் இந்த வகுப்புகள் இயங்கும் எனஅறிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.7.73 கோடி மதிப்பில் நடவடிக்கைகள் மேற்ெகாள்ளப்பட்டன. மேலும் சிறப்பு பாடதிட்டங்கள் தயாரிக்கப்பட்டு பாட புத்தகங்களும் அச்சிடும் பணி விரைவில் தொடங்கப்பட்டது. 3 முதல் 4 வயதுடைய குழந்தைகள் எல்கேஜியிலும், 4 முதல் 5 வயதுடைய குழந்தைகள் யுகேஜியிலும் பயில ஏற்பாடு செய்யப்பட்டது.


சென்னையில் நடந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தை துவங்கி வைத்தார். ஆனால் அறிவித்தபடி ஜனவரி 21ம் தேதி தமிழகத்தின் பிற பகுதிகளில் இந்த பள்ளிகள் இயங்கவில்லை. அந்த நாள் முதல் ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தம் தொடங்கியதால் வகுப்புகள் தொடங்கும் பணி நடக்கவில்லை. இதனிடையே இப்பள்ளிகளுக்கு உபரி இடைநிலை ஆசிரியர்கள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டனர். உபரி ஆசிரியர்கள் எல்கேஜி வகுப்பு எடுக்க உத்தரவிட்டதற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதுதொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து உபரி ஆசிரியர்களை நியமிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் ஏற்கனவே மாற்றப்பட்ட உபரி இடைநிலை ஆசிரியர்களை அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய பழைய பள்ளிக்கே திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.


நெல்லை மாவட்டத்தில் மட்டும் 36 பள்ளிகளுடன் இணைந்த அங்கன்வாடி மையங்கள் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளாக மாற்றப்பட்டுள்ளன. அங்கன்வாடி அமைப்பாளர்கள் மத்தியிலும் இத்திட்டத்தால் கலக்கம் ஏற்பட்டது. தங்களது பணிக்கு சிக்கல் ஏற்படுமோ என அவர்கள் கலங்கினர். இந்த நிலையில் எல்கேஜி வகுப்புகளை நடத்த புதிய ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. 

இதனால் இத்திட்டம் ஆரம்ப நிலையிலேயே முடங்கியுள்ளதால் கல்வியாளர்கள் கவலையடைந்துள்ளனர். குறிப்பாக தனியார் பள்ளிகளில் பல ஆயிரக்கணக்கில் செலவழிக்க முடியாத நிலையிலுள்ள ஏழை மக்கள் தங்கள் பிள்ளைகளை ஆர்வத்துடன் அரசு எல்கேஜி வகுப்பில் சேர்த்தனர். ஆனால் அங்கு எதுவுமே கற்பிக்கப்படாமல் குழந்தைகளை சாப்பிட வைத்து தூங்க வைப்பதால் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Post Top Ad