Today Rasipalan - 13.12.2018 - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, December 13, 2018

Today Rasipalan - 13.12.2018





*🚩🔯 ராசி பலன்கள் 🔯🚩


🔯மேஷம் ராசி
தனவரவில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். தொழிலில் அலைச்சல்கள் அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் முன்னேற்றமான சூழல் அமையும். கல்வி பயிலும் மாணவர்கள் கவனத்துடன் இருக்கவும். வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. சுரங்க பணியில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

அசுவினி : முன்னேற்றமான நாள்.
பரணி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
கிருத்திகை : கவனம் வேண்டும்.


🔯ரிஷபம் ராசி

உத்தியோகஸ்தரர்கள் இழுபறியில் இருந்த பணிகளை செய்து முடிப்பார்கள். எதிர்பார்த்த தனவரவு மகிழ்ச்சியை அளிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய யுக்திகளை பயன்படுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

கிருத்திகை : காரியசித்தி உண்டாகும்.
ரோகிணி : புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
மிருகசீரிடம் : மகிழ்ச்சியான நாள்.


🔯மிதுனம் ராசி

திருமணம் சம்பந்தமான முயற்சிகள் கைக்கூடும். கூட்டாளிகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். தொழில் திறமைகள் வெளிப்படும். உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிடம் : முயற்சிகள் கைக்கூடும்.
திருவாதிரை : இலாபகரமான நாள்.
புனர்பூசம் : திறமைகள் வெளிப்படும்.


🔯கடகம் ராசி

புத்திரர்களிடம் கனிவுடன் பழகவும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். வருவாய் நிமிர்த்தமான எண்ணங்கள் மற்றும் அலைச்சல்கள் மேலோங்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உணர்வு ஏற்படும். வழக்குகளில் நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : கனிவு வேண்டும்.
பூசம் : புரிதல் உண்டாகும்.
ஆயில்யம் : நிதானம் வேண்டும்.


🔯சிம்மம் ராசி

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் இழந்த பொருட்களை மீட்பீர்கள். கால்நடைகளின் மூலம் இலாபம் அதிகரிக்கும். தொழிலில் நீங்கள் எடுக்கும் நேர்த்தியான முடிவுகளால் மேன்மை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
பூரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திரம் : இலாபம் அதிகரிக்கும்.

🔯கன்னி ராசி

விலையுயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். கவனக்குறைவால் பிறரிடம் அவச்சொல் வாங்க நேரிடலாம். வியாபாரத்தை விரிவுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். குறுகிய தூர பயணங்களால் சாதகமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : செயல்களில் கவனம் தேவை.
அஸ்தம் : முயற்சிகள் அதிகரிக்கும்.
சித்திரை : சாதகமான நாள்.


🔯துலாம் ராசி

மனதில் இருந்த கவலைகள் நீங்கும். உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆதரவான நாள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். அயல்நாட்டு பயணங்களில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். திருமண வரன்கள் கைக்கூடி வரும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : கவலைகள் நீங்கும்.
சுவாதி : ஆதரவான நாள்.
விசாகம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.


🔯விருச்சகம் ராசி

தாய் வழி உறவுகளால் ஆதரவான சூழல் ஏற்படும். நிலம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வாகனங்களில் உள்ள பழுதுகளை சரி செய்வீர்கள். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். சமூக நிகழ்வுகளால் மனதில் மாற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : ஆதரவான நாள்.
அனுஷம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
கேட்டை : மாற்றம் உண்டாகும்.

🔯தனுசு ராசி

எடுத்த வேலையை விரைவாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். செல்வாக்கு உயரும். பணியில் அங்கீகாரம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மூலம் : செயல்வேகம் அதிகரிக்கும்.
பூராடம் : பாராட்டப்படுவீர்கள்.
உத்திராடம் : செல்வாக்கு உயரும்.


🔯மகரம் ராசி

சுயதொழில் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். ஆராய்ச்சி சம்பந்தமான தேடலில் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். ஆசைகள் நிறைவேறும். ஆன்மீக பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். இணையதளம் சம்பந்தமான பணிகளில் சாதகமான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : எண்ணங்கள் மேலோங்கும்.
திருவோணம் : ஆசைகள் நிறைவேறும்.
அவிட்டம் : வாய்ப்புகள் அமையும்.


🔯கும்பம் ராசி
செய்யும் செயலில் திருப்திகரமான நிலை அமையும். தந்தை வழி சொத்துகளில் இருந்து வந்த இடர்பாடுகள் நீங்கும். பணியில் இருந்த வந்த மந்தத்தன்மை நீங்கும். உடன் பணிபுரியும் ஊழியர்களால் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்

அவிட்டம் : திருப்திகரமான நாள்.
சதயம் : இடர்பாடுகள் நீங்கும்.
பூரட்டாதி : பணவரவு உண்டாகும்

🔯மீனம் ராசி

கலை சார்ந்த அறிவுகள் மேம்படும். இறைவழிபாடுகளால் மனம் மகிழ்வீர்கள். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். வீண் செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். பணிபுரியும் இடங்களில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

பூரட்டாதி : அறிவு மேம்படும்.
உத்திரட்டாதி : நிதானம் வேண்டும்.
ரேவதி : நம்பிக்கை அதிகரிக்கும்.

Post Top Ad