வகுப்பு ஆசிரியர்களின் வருகைப்பதிவு பரிதாபங்கள்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, December 20, 2018

வகுப்பு ஆசிரியர்களின் வருகைப்பதிவு பரிதாபங்கள்!



- ஆசிரியை சீதாலட்சுமி

சமீப காலம் வரை  பள்ளிகளில் வருகைப்பதிவு முறை பதிவேடுகளில் பதிவிடுவதாக தான் இருந்தது.

தற்போது அதை டிஜிட்டல் ஆக்கும் முயற்சியாக TNSchools மொபைல் செயலி மூலமாக பதிய வேண்டும் என்று கொண்டு வந்ததன் மூலம் வகுப்பு ஆசிரியர்கள் படும் கஷ்டங்கள் கல்வித்துறை அதிகாரிகள் அறிவார்களா என்று தெரியவில்லை! 

#ஆசிரியர் தன் மொபைலில் மாணவர்களின் வருகையைப்  பதிவு செய்த பிறகும் பல சமயங்களில் விடுப்பு மாணவர்கள் செயலியில் அப்டேட் ஆவதில்லை.

#ஒரு ஆசிரியர் அவர் மொபைலில் வருகையைப் பதிவு செய்த பின் வேறொரு ஆசிரியரின் மொபைலில் அதே வகுப்பை பார்த்தால் வருகை பதிவு செய்யப்பட்டதாக காண்பிக்கவில்லை. மீண்டும் அந்த மொபைலில் வருகை பதிவு செய்தால் தான் அவர் மொபைலில் தெரிகிறது. 


#இப்படி ஒரு நிலையில் கல்வி உயரதிகாரிகள் அவர்கள் மொபைலில் ஒரு குறிப்பிட்ட பள்ளியில் மொபைல் செயலியை உபயோகித்து வருகை பதிவு செய்திருக்கிறார்களா என்று கண்டறிய முற்பட்டால் அந்த பள்ளியில் மொபைல் செயலியை உபயோகப்படுத்தவில்லை என்பது போல தான் காண்பிக்கும்!

#பதிவு செய்த பிறகு Alert என்ற தலைப்பில் School login mismatch என்று ஒரு தகவல் வருகிறது. அதை க்ளிக் செய்து விட்டால் நாம் பதிவு செய்த வருகை மாயமாக மறைந்து விடுகிறது!

#மொபைல் செயலியில் 9:30 மணிக்குள் வருகையைப் பதிய வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் அந்த மாணவர்கள் தாமத வருகை என்றாகி விடும். 9:30 மணிக்குள் என்ற கால அளவு இறை வணக்கத்திற்குரிய காலம். அந்த நேரத்தில் அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் இறை வணக்கக் கூடத்தில் இருப்பார்கள். 

#மதியமும் இந்த வருகைப்பதிவை மொபைல் செயலியில் பதிய வேண்டும். 


#மொபைல் செயலியில் பதிந்த பிறகும் Daily Report என்ற பகுதியில் வருகையைச் சரிபார்க்கும் போது ஆசிரியர்கள் பதிந்த வருகை  பல வகுப்புகளுக்கு entry ஆகவில்லை.

#ஒரே நேரத்தில் சர்வரை பல ஆசிரியர்கள் உபயோகப்படுத்துவதால் இணையத் தொடர்பு சரிவர கிடைப்பதில்லை.

#ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டிய பாடப்பகுதிகள் அதிகம் உள்ள நிலையில் இந்த மொபைல் செயலி மூலம் வருகைப் பதிவு மேற்கொள்வது அவர்களின் நேரத்தை வீணடிக்கிறது. 

#புதிய புதிய கற்றல் முறைகள், எண்ணற்ற பதிவேடுகள், கணினி மயமாக்கல் இவைகள் அனைத்தும் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு என்று நினைத்து கல்வித்துறை கொண்டு வந்துள்ளது. 

#ஆனால் நடைமுறையில் இவை அனைத்தும் கல்வி கற்றுத்தருவதற்கான நேரத்தை வீணடிக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை! 

#தற்கால கல்வி முறையில் பயிலும் மாணவர்களை விட அந்த கால குருகுல முறையிலும் 1960-2000 வரையிலுமான காலக்கட்டத்தில் பயின்ற மாணவர்களின் அறிவுத்திறன் மேலோங்கி இருந்தது என்பதை அனைவரும் நன்கு அறிவர். 

#கல்வித்துறையில் மாற்றம் என்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

#ஆனால் அவை மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். 

#ஆசிரியர்களுக்கு மன உளைச்சல் இல்லாத வகையிலும் இருக்க வேண்டும். 

#இவற்றை மனதில் வைத்து #மேதகு_கல்வி_அதிகாரிகளும் #மாண்புமிகு
#கல்வியமைச்சரும் ஆசிரியர்களின் துயர் களைய முன்வருவார்களா?

இப்படிக்கு
ஆசிரியை சீதாலட்சுமி.

Post Top Ad