வாக்காளர் பட்டியலில் ஆதாரை இணைக்க தேர்தல் ஆணையம் ஆலோசனை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, December 13, 2018

வாக்காளர் பட்டியலில் ஆதாரை இணைக்க தேர்தல் ஆணையம் ஆலோசனை




வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க சட்டமியற்ற தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த 2015 ஆம் வருடம் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்கும் பணியை தொடங்கியது. ஆனால் ஆதார் என்பது தனி மனித உரிமை என்பதால் அதை பொதுப் பணிகளுக்கு உபயோகிக்க தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ப்பட்டதால் இந்த பணி நிறுத்தப்பட்டது. அதன் பிறகு ஆதார் இணைப்பு பல பணிகளுக்கு தேவை இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலியில் கள்ள ஓட்டுக்களை தவிர்க்க ஆதாரை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர். 'உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஒரு சில அரசு பணிகளுக்கு மட்டுமே ஆதாரை இணைக்க முடியும். அதுவும் சட்டப்படி வேறு அடையாளம் காண முடியாத நிலையில் இருந்தால் மட்டுமே இணைக்க வேண்டும்.

தற்போது வாக்காளர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே வாக்களர்களை அடையாளம் கண்டுக் கொள்ளவும் இரண்டு இடங்களில் பதிவு செய்வதை தடுக்கவும் ஒரு அடையாள முறை தேவைப்படுகிறது. எனவே தேர்தல் ஆணையம் ஆதாரை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறது.

அத்துடன் தற்போதுள்ள நிலையில் சட்டமாக்கபட்டால் மட்டுமே ஆதார் மற்றும் வாக்காளர் பட்டியல் இணைப்பு நடத்த முடியும். எனவே இதை பாராளுமன்றத்தில் சட்டமாக்குவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த இணைப்புக்கு அனைத்துக் கட்சிகளும் வரவேற்பு அளிக்கும் என்னும் நம்பிக்கை உள்ளதால் விரைவில் சட்டம் இயற்றப்பட்டு ஆதார் மற்றும் வாக்காளர் பட்டியல் இணைப்பு சட்டமாக்கப்படும்' என தெரிவித்துள்ளார்.

Post Top Ad