ஆப்சென்ட்' ஆகும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க 'கிடுக்கிப்பிடி!' 75 சதவீதம் வருகை பதிவு இருந்தால் மட்டுமே 'ஹால் டிக்கெட் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, December 2, 2018

ஆப்சென்ட்' ஆகும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க 'கிடுக்கிப்பிடி!' 75 சதவீதம் வருகை பதிவு இருந்தால் மட்டுமே 'ஹால் டிக்கெட்





பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, 75 சதவீத வருகை இருந்தால் மட்டுமே, தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும். பள்ளிகளுக்கு வராமல், பாஸ் செய்தால் போதும் என்ற மனநிலையுடன், அடிக்கடி,'ஆப்சென்ட்' ஆகும் மாணவர்களுக்கு, 'செக்' வைக்கும் விதமாக, கல்வித்துறை கிடுக்கிப்பிடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக, 'அட்டென்டென்ஸ் ஆப்'பை உருவாக்கி நடைமுறைப்படுத்தியுள்ளது.


கடந்த இரண்டு ஆண்டாக, பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் தொடர்கிறது. சி.பி.எஸ்.இ.,யைவிட சற்று கூடுதலாகவும், என்.சி.ஆர்.டி., பாடத்திட்டத்தைவிட கூடுதலாகவும் படிக்கும் வகையில், ஒன்று, ஆறு, ஒன்பது, பிளஸ் 1 ஆகிய வகுப்புக்கு, நடப்பாண்டு முதல் பாடப்புத்தகம் மாற்றப்பட்டது. வரும், 2019-20ல் மற்ற அனைத்து வகுப்புக்கும், புதிய பாடத்திட்டம் அறிமுகமாகிறது. புதிய பாடத்திட்டத்தில், 'க்யூ.ஆர்., கோட்' கூடுதல் தகவல்களுக்கான இணைய தள இணைப்புகள், யூ-டியூப் விளக்கம், இணைய தளத்தில் படம், பாடல்கள், பழைய சம்பவங்களுடன் காட்சிகள் என, பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக படிக்க விரும்பும் மாணவர்களுக்கும், தான் படிப்பதை உறுதிப்படுத்தவும், இவை உதவுகிறது. இதன் மூலம், இம்மாணவர்கள், நீட், என்.ஐ.டி.,- ஐ.ஐ.டி.,- ஐ.ஐ.எம்., உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை எளிதில் எழுதும் வாய்ப்பை பெறுகின்றனர். அதே நேரம், மாணவர்கள் வருகை குறைவு, காப்பி அடித்தல், வேறு நபர்களை வைத்து எழுதுதல், விடைத்தாளை மாற்றுதல் அல்லது கூடுதல் தாளை இணைத்தல் போன்ற தவறுகளுக்கும், 'செக்' வைக்கப்பட்டுள்ளது. 'பாஸ்' ஆனால் போதும் என நினைக்கும் மாணவர்கள், அடிக்கடி பள்ளிக்கு மட்டம் போட்டு, 'ஆப்சென்ட்' ஆகும் மாணவர்களுக்கு, 'செக்' வைக்கும் விதமாக, 2018 டிசம்பர் 1 முதல், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்காக, 'அட்டென்டென்ஸ் ஆப்' அறிமுகம் செய்து, 'கிடுக்கிப்படி' உத்தரவை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

Post Top Ad