தமிழகத்தில் மேலும் 1,843 பேருக்கு கொரோனா தொற்று
* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 25,344 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 797 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 479-ஆக உயர்ந்துள்ளது.
* சென்னையில் இன்று ஒரே நாளில் 1257 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 33,244 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 79 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 20,678 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* தமிழகத்தில் இதுவரை 7,29,002 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
* மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
* அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
* தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 54.49% ஆக உள்ளது.
* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 18,403 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 1438 பேருக்கு தொற்று உறுதியானது.
* கொரோனாவுக்கு எதிராக மக்கள் இயக்கமாக நாம் மாற வேண்டும்.
* தடுப்பூசிகள், மருந்துகள் இல்லமால் சிகிச்சை அளிக்கும் முறையை அரசு பின்பற்றுகிறது.
* தமிழகத்தில் அதிக பரிசோதனைகள் நடத்தப்படுவதால், விரைவில் குணப்படுத்தப்படுகிறது.
* மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா வைரசை அரசு கட்டுப்படுத்தி வருகிறது.
* மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்து வருகின்றனர். ஒவ்வொரு உயிரும் அரசுக்கு முக்கியம்.
* வல்லரசு நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன தமிழக அரசு களத்தில் நின்று போராடி வருகிறது.
* கொரோனா தொடர்பான எந்த தகவலையும் அரசு மறைக்கவில்லை,மறுக்கவும் இல்லை.
* வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்;
^ மகாராஷ்டிரா - 18
^ டெல்லி - 11
^ கேரளா - 3
^ ராஜஸ்தான் - 2
^ கர்நாடகா - 4
^ ஆந்திரப்பிரதேசம் - 1
^ உதிர்ப்பிரேதேசம் - 1
^ ஒடிஷா - 1
* வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்
^ துபாய் - 1
^ அரபு எமிரேட்ஸ் - 1
^ கத்தார் - 4
^ மலேசியா - 2
^ தோஹா - 1
^ மஸ்கட் - 4
