பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்கிற தமிழக அரசின் முடிவை முழுமனதோடு வாழ்த்தி வரவேற்கிறோம்.
தமிழக அரசு வரும் ஜூன் 15ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என அறிவித்திருந்தது அதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்து வந்தது.
கொரோனா மிகத் தீவிரமாகப் பரவி வரும் இச்சூழலில், சமூக தொற்றாக மாற வாய்ப்புள்ளது. தேர்வு எழுத உள்ள குழந்தைகளையும், பெற்றோர்களையும், தேர்வு பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களையும் ,பெரும் கூட்டமாக பொது இடங்களில் கூடுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும்.
நோய் தொற்று அதிகரிப்பதற்கும் வாய்ப்பு ஏற்படும் ,70 நாட்களாக பள்ளிகளை விட்டு விலகி இருக்கக் கூடிய குழந்தைகள் போதிய உணவு பாதுகாப்பு ,பயிற்சி இல்லாமல் இருப்பதால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கடந்த மே 14-ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தோம்.
நேற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று ஆசிரியர் இயக்கம சார்பில் தொடரப்பட்ட வழக்கிலும், நீதியரசர்கள் தேர்வுகளை நடத்துவதற்கு ஏற்ற காலம் இது அல்ல என்று கருத்துகளை தெரிவித்தனர்.
இருப்பினும் மாணவர்கள் ஆசிரியர்களின் மனநிலை அறிந்து, மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்பதனை தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையிலும் தமிழகத்தினுடைய அனைத்து அரசியல் கட்சிகளும், கல்வியாளர்களும், ஒருசேர எழுப்பிய குரல் தமிழக அரசின் காதுகளை தாமதமாகவாவது சென்றடைந்துள்ளது.
அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்கிற முடிவை பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வரவேற்றாலும், காலாண்டு அரையாண்டு தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மொத்த மதிப்பெண் கணக்கிடும் போது அவற்றை மதிப்பெண்களாக வழங்காமல் தர அடிப்படையில் A,B,C என பிரித்து 401 முதல் 499 வரை எடுத்துள்ள மதிப்பெண்கள் எடுத்து உள்ளவர்களுக்கு ஏ தர நிலையும் 300 முதல் 399 வரை எடுத்துள்ள மாணவர்களுக்கு B தர நிலையும் அதற்கு குறைவாக உள்ள அனைத்து மாணவர்களுக்கும் C தர நிலையும் வழங்கினால் மாணவர்கள் இடையேயான ஒப்பீட்டு முறையில் அவர்கள், அடுத்த கட்ட படிப்புகளை தொடர்வதற்கும் சாதகமான சூழல் உருவாகும்.
இதை தமிழக அரசு முழுமையாக பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
Dr.P. பேட்ரிக் ரெய்மாண்ட்
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு.
