ஆசிரியர்களுக்கான பயோமெட்ரிக் வருகை பதிவு - பள்ளிக்கல்வி புதிய உத்தரவு - Asiriyar.Net

Wednesday, October 23, 2019

ஆசிரியர்களுக்கான பயோமெட்ரிக் வருகை பதிவு - பள்ளிக்கல்வி புதிய உத்தரவு





பள்ளிக்கல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பயோமெட்ரிக் மற்றும் வருகை பதிவிற்கான மொபைல் செயலியின் பயன்பாட்டால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வருகை பதிவில் தொய்வு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, நாள்தோறும் பிற்பகல் ஒரு மணியளவில் வருகைப்பதிவு விவரத்தை அனுப்ப, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு  உத்தரவிட்டுள்ளது. தங்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் ஆசிரியர், மாணவர்கள் வருகை விவரத்தை, E.M.I.S.,எனப்படும் கல்வி தகவல் மேலாண்மை பக்கத்தில்  பதிவேற்றம் செய்ய, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.



Post Top Ad