Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Sunday, August 18, 2019

தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு




தமிழகத்தில் இன்றும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த இரு தினங்களாக மழை பெய்கிறது. பல்வேறு இடங்களில் இரவில் கனமழைபெய்யும் அதேவேளையில் பகல் நேரங்களில் சாரல் மழையும் விட்டு விட்டு பெய்கிறது. இதேபோல், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரபகுதிகளிலும் நேற்று பரவலாக மழை பெய்தது. சிவகங்கை, சோழவரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், தூத்துக்குடி, கோவில்பட்டி, விழுப்புரம் என தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் நேற்று மழை பெய்தது.


இந்நிலையில், தமிழகத்தில் இன்றும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசானது முதல் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
LightBlog