விண்வெளி: மாணவர்களுக்கான விநாடி- வினா போட்டி - Asiriyar.Net

Monday, August 19, 2019

விண்வெளி: மாணவர்களுக்கான விநாடி- வினா போட்டிஉலக இயற்கை நிதியம் அமைப்பு சார்பில் நாடு தழுவிய அளவில் பள்ளி மாணவர்களுக்கான விநாடி வினா போட்டியில் கலந்துகொள்ள செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து உலக இயற்கை நிதியம் அமைப்பின் சுற்றுச்சூழல் கல்வி இயக்குநர் ராதிகா சூரி வெளியிட்ட அறிக்கையில், "இயற்கை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் நாடு தழுவிய அளவில் பள்ளி மாணவர்களுக்கான  விநாடி வினா போட்டி கடந்த 2008-ஆம் ஆண்டுமுதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பூமி கிரகத்தை மையமாகக் கொண்டு விநாடி வினா போட்டி நடைபெற உள்ளது.

இந்தப் போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் பள்ளிகள் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad