இனி ஏடிஎம்களில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் மட்டுமே கட்டணம்.. மத்ததெல்லாம் இலவசம்.. RBI அதிரடி!!! - Asiriyar.Net

Thursday, August 15, 2019

இனி ஏடிஎம்களில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் மட்டுமே கட்டணம்.. மத்ததெல்லாம் இலவசம்.. RBI அதிரடி!!!

மும்பை: பணமில்லா பரிவர்த்தனைகளான வங்கிக் கணக்கில் மீதமுள்ள தொகை பார்ப்பது, காசோலை புத்தகம் கோருவது, வரிகளை செலுத்துவது, நிதி பரிமாற்றம் செய்வது ஆகியவை இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளாக கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

*வங்கிக் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம் மையங்களில் மாதந்தோறும் 5 முறையும் மற்ற வங்கி ஏடிஎம்களில் மாதந்தோறும் 3 முறையும் கட்டணமில்லாமல் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.*

*கூடுதலாக செய்யும் நிதி பரிவர்த்தனைக்கு 17 ரூபாயும், நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ.6-ம் வசூலிக்கப்பட்டு வந்தது. சர்வதேச பரிவர்த்தனைகள் என்றால் பேலன்ஸ் சரிபார்க்க மட்டும் 17 ரூபாய் கட்டணம், பணம் எடுத்தால் 169 ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்ற விதி கடந்த ஜனவரி மாதம் முதல் விதிக்கப்பட்டது.*

*இதை வாடிக்கையாளர்கள் கடுமையாக எதிர்த்தனர். தங்கள் பணத்தை எடுப்பதற்கு கட்டணம் ஏன் செலுத்த வேண்டும் என கேள்வி எழுப்பினர். இந்த 5 முறை பரிமாற்றத்தில் ஏடிஎம் இயந்திரங்களில் கோளாறு, பணம் இல்லாமல் இருக்கும்போது செய்யப்படும் பரிமாற்றமும் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டு வந்தது.*

*இந்த நிலையில் பணமில்லா பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் அது இலவச பரிவர்த்தனைகளின் கீழ் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.*

*இது தொடர்பாக எழுத்துப்பூர்வமான அறிக்கையை ஆர்பிஐ வழங்கியுள்ளது. எனவே இலவச பணபரிமாற்றத்தை இனி முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.*

*அதாவது வங்கி தரப்பிலோ, வாடிக்கையாளர் தரப்பிலோ தோல்வி அடைந்த பரிவர்த்தனைகள், பணபரிமாற்றம் அல்லாத சேவைகளான வங்கிக் கணக்கில் பேலன்ஸ் தெரிந்து கொள்ளுதல், காசோலை புத்தகம் கோருவது, வரி செலுத்துவது ஆகியவற்றை இனி இலவச பரிவர்த்தனையில் சேர்க்கப்படாது.

Post Top Ad