ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் செப்.23ல் பிரசார பயணம் - Asiriyar.Net

Saturday, August 17, 2019

ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் செப்.23ல் பிரசார பயணம்அரசு பள்ளிகளை மூடக்கூடாது தமிழ்வழி கிராமப்புற கல்வியை பாதுகாக்க வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் செப்.23 முதல் ஆறு நாட்களுக்கு தமிழகத்தில் பிரசார பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர்.இது குறித்து கூட்டணி நிர்வாகி முத்துமுருகன் கூறியதாவது:அரசுப்பள்ளிகளை மூடுவதை அரசு கை விடவேண்டும். மூடிய பள்ளிகளை திறக்க வேண்டும். தமிழ் வழிக்கல்வியை பாதுகாக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.23ல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆறு மண்டலங்களுக்கு உட்பட்ட மாவட்டங்களில் பிரசார பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது என்றார்.

Post Top Ad