அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பண்டிகை முன்பணம் 10,000ஆக அதிகரிப்பு: தமிழக அரசு உத்தரவு - Asiriyar.Net

Saturday, August 3, 2019

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பண்டிகை முன்பணம் 10,000ஆக அதிகரிப்பு: தமிழக அரசு உத்தரவு
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் பண்டிகை முன்பணம் ரூ.5000லிருந்து ரூ.10,000ஆக உயர்த்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் பண்டிகை முன்பணம் ரூ.5000ல் இருந்து ரூ.10,000ஆக உயர்த்தப்படும் என்றும் இதற்கான ஆணைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் சட்டப்பேரவையில் கடந்த மாதம் 20ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்.இதையடுத்து அதற்கான அரசு உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து, தமிழக நிதித்துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: ஒரு அரசுக்கு அச்சாணியாக திகழ்பவர்கள் அரசு ஊழியர்கள். அவர்கள்  நலனில் அக்கறை கொண்டது தமிழக அரசு. அந்த அடிப்படையில் அரசு பணியாளர்கள்  மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு தற்போது வழங்கப்படும் பண்டிகை முன்பணம் 5,000 ரூபாயில் இருந்து 10,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post Top Ad