அட்ராசக்க..! வேட்டி அணிந்து வேலைக்கு வாங்க..! தமிழக அரசு அதிரடி..! - Asiriyar.Net

Sunday, June 2, 2019

அட்ராசக்க..! வேட்டி அணிந்து வேலைக்கு வாங்க..! தமிழக அரசு அதிரடி..!
அட்ராசக்க..! வேட்டி அணிந்து வேலைக்கு வாங்க..! தலைமை செயலக ஊழியர்களுக்கு கெடுபிடி..!

நல்லொழுக்கத்தை பாதிக்காத வகையில் ஆடைகளை அணிய வேண்டும் என தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

தலைமை செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் நல்லொழுக்கத்தை பேணிக் காக்கும் வகையில் அந்த இடத்திற்கு ஏற்றவாறு முறையான ஆடைகளை சுத்தமாக அணிந்து வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.அதன்படி தலைமை செயலக அலுவலகத்தில் பெண்கள் சல்வார் கமீஸ், துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அல்லது புடவை அணிய வேண்டும் என்றும், இதேபோன்று ஆண்களைப் பொறுத்தவரையில் சட்டை மற்றும் பேண்ட் அணிய வேண்டும் என்றும் கேஷுவல் ஆடைகளை அணியாமல் formal ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
வேட்டி சட்டை அணிந்து வந்தாலும் மிகவும் சிறப்பானது என ஆடை கட்டுப்பாடு தொடர்பாக பணியாளர் நலத் துறை விளக்கம் அளித்துள்ளது. நீதித் துறையை சார்ந்த மன்றங்களில் ஆஜராக தேவை இருந்தால் அப்போது முழு கையுடன் கூடிய டை அணிந்திருக்க வேண்டும் என்றும்தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

Post Top Ad