அரசுப் பள்ளிக்கு கல்விச்சீர் கொண்டுவந்த கிராம மக்கள் - Asiriyar.Net

Sunday, February 17, 2019

அரசுப் பள்ளிக்கு கல்விச்சீர் கொண்டுவந்த கிராம மக்கள்



அன்னவாசல்,பிப்.16: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் குடுமியான்மலை அருகே உள்ள ஆணைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கிராம மக்கள் சார்பில் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில் ஆணைப்பட்டி,சீகம்பட்டி, பின்னங்குடி ஊர்  பொதுமக்கள் பள்ளிக்கும் மாணவர்களுக்கும் தேவையான டிவிடிபிளேயர்,ஸ்பீக்கர்,மைக்,தட்டு,டம்ளர்,வாளி,கால்மிதியடிகள் ,சேர்,உலக உருண்டை,சாக்பீஸ்,கத்தரிக்கோல்,பேனா,பென்சில் போன்ற பொருட்களை கல்விச் சீராக கொண்டு வந்து பள்ளித் தலைமையாசிர் பழனிக்கண்ணுவிடம்  ஒப்படைத்தனர்.

விழாவில் அன்னவாசல் வட்டாரக் கல்வி அலுவலர் பெ.துரையரசன்,வட்டார வளமைய மேற்பார்வையாளர் அ.கோவிந்தராசு,வட்டார வளமைய பயிற்றுநர் அ.கோவிந்தராசு ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.

விழாவில் பள்ளிமேலாண்மைக்குழுத்தலைவர் கணேசன்,பெற்றோர் ஆசிரியர்கழகத் தலைவர் சுப்பிரமணியன்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுப்பையா,முன்னாள் வார்டு உறுப்பினர் அடைக்கண் மற்றும் பின்னங்குடி ,சீகம்பட்டி,ஆணைப்பட்டி கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை இடைநிலை ஆசிரியை சசிகலா மற்றும் செல்லம் டேரா ஆகியோர்  செய்திருந்தார்.



Post Top Ad