சூலூர் அருகே 2 ஆசிரியர்கள் இட மாற்றம்... ஆசிரியர்களின் இடமாற்றத்திற்கு மாணவர்கள் எதிர்ப்பு - Asiriyar.Net

Friday, February 1, 2019

சூலூர் அருகே 2 ஆசிரியர்கள் இட மாற்றம்... ஆசிரியர்களின் இடமாற்றத்திற்கு மாணவர்கள் எதிர்ப்பு






ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கு திரும்பிய நிலையில் ஆசிரியர்கள் பணியிட மற்றும் செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் சரவணக்குமார், கணித ஆசிரியர் தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டு நேற்று காலை பணிக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு அவர்களுக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டது. அதனை வாங்க இருவரும் பள்ளிக்கு வந்த போது மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Post Top Ad