டிசம்பர் மாதம் பிறந்தவர்கள் ஏன் ஸ்பெஷல்? - ஓர் அறிவியல் அலசல்! - Asiriyar.Net

Thursday, December 20, 2018

டிசம்பர் மாதம் பிறந்தவர்கள் ஏன் ஸ்பெஷல்? - ஓர் அறிவியல் அலசல்!





டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் `சம்திங் மோர் ஸ்பெஷல்' என்று பல்வேறு அறிவியல் ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன.
டிசம்பர் மாதம் பிறந்தவர்கள் ஏன் ஸ்பெஷல்? - ஓர் அறிவியல் அலசல்!

டிசம்பர் மாதத்தில் பிறந்த குழந்தைகள் பலர், தங்கள் பிறந்தநாளை வருடத்தின் கடைசி மாதத்தில் கொண்டாடுவதை விரும்பவில்லை என்கிறது ஓர் ஆய்வு. பிறந்தநாளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு என்று பண்டிகைகளைக் கொண்டாடுவதிலேயே குடும்பத்தினர் கவனம் செலுத்துகிறார்களாம். உறவினர்கள், நண்பர்கள் பரிசுகள் வழங்கும்போதுகூட பிறந்தநாளுக்கென்று தனிப் பரிசு வழங்காமல், கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கும் சேர்த்து ஒரே பரிசாக கொடுத்துவிடுவார்களாம். புத்தாடைகள்கூட கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு என்று எடுப்பதால் பலருக்குப் பிறந்தாளுக்கு புத்தாடைகள் கிடைப்பதில்லையாம்.

டிசம்பர்
நமக்கும்கூட டிசம்பர் மாதம் என்பது ஓர் அவசர மாதம்தான். பள்ளிக் குழந்தைகளுக்கு அரையாண்டு தேர்வுகள், கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகள், மார்கழி மாதத்தில் விரதம், பூஜை என வீட்டிலும் அனைவரும் `பிஸி'யாகவே இருப்போம். அதே பரபரப்புடன் டிசம்பர் மாதம் பிறந்தவர்களின் பிறந்தநாள்களும் கடந்து போய்விடும். இதனால் பிற மாதத்தில் பிறந்தவர்களைப் போன்று டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்களின் பிறந்தநாளுக்கு முக்கியத்துவம் கிடைப்பதில்லை என்பது உலகம் முழுவதும் உள்ள டிசம்பர் மாதக் குழந்தைகளின் அங்கலாய்ப்பு.



ஆனால், டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் `சம்திங் மோர் ஸ்பெஷல்' என்று பல்வேறு அறிவியல் ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. இதுதொடர்பான ஆய்வுமுடிவை `டெய்லி மிரர்' நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதில் பிற மாதத்தில் பிறந்தவர்களிடம் இல்லாத சில சிறப்பம்சங்கள் டிசம்பர் மாதம் பிறந்தவர்களிடம் இருக்கிறதாம்.

டிசம்பர் மாதக் குழந்தைகளிடம் அப்படி என்ன ஸ்பெஷல்?

நீண்ட ஆயுள்

`டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்களுக்கு ஆயுள் கெட்டி' என்கிறது `ஜர்னல் ஆஃப் ஏஜிங்' மருத்துவ இதழ். அதன்படி டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் 105 அல்லது அதற்கும் மேல் வாழ்வதற்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது அந்த இதழ்.

நட்பு


அமெரிக்கக் கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், பொதுவாக டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களைப் பற்றி அதிகமாகப் புகார் பட்டியல் வாசிப்பதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் மனநிலை எப்போதும் சீராக இருப்பதால், `மூட் ஸ்விங்' எனப்படும் அவ்வப்போது மனநிலை மாறும் பிரச்னை ஏற்படுவதில்லை. இதனால் நட்பு பாராட்ட சிறந்தவர்கள் டிசம்பர் மாதக் குழந்தைகள் தானாம்.

இதய நோய் அண்டாது

அமெரிக்காவில் 17.49 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், `டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்களுக்கு இதயம் மற்றும் ரத்தநாளம் தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவு' என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வை அதிகாரபூர்வமாக `வாஷிங்டன் போஸ்ட்' நாளிதழ் வெளியிட்டது. காலநிலை மாற்றங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.





பல் மருத்துவர்கள்!

அறிவியல் ஆதாரங்களின்படி இல்லாமல், தகவல்கள் மற்றும் தரவுகளின்படி நடத்தப்பட்ட ஆய்வில் டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்களில் பலர் பல் மருத்துவர்களாக இருக்கிறார்களாம். அமெரிக்காவின் பீட்ஸ்பெர்க் நகரைச் சேர்ந்த புற்றுநோய் செவிலிய அறக்கட்டளை நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது.

அதிகாலை பறவைகள்

அதிகாலைப் பறவைகள்

டிசம்பர் என்பது குளிர்காலம் என்பதால், இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தூங்குமூஞ்சிகளாக இருக்க மாட்டார்கள். இவர்கள் இரவில் சீக்கிரமே உறங்கச் சென்றுவிட்டு, அதிகாலையிலேயே எழும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்களாம். அதிகாலையில் எழுவதைச் சந்தோஷமாக அனுபவிக்கும் மனநிலையும் அவர்களிடம் காணப்படுமாம்.

இப்போது டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் `நான் ரொம்ப ஸ்பெஷல்' என்று காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளலாம்.

Post Top Ad